பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 தமிழில் அறிவியல் செல்வம் (9) போலிக் கருப்பம் : இதுபற்றி ஈண்டு ஒரு குறிப்பை உங்கள் முன்வைக்க எண்ணுகின்றேன். ஏதோ ஒரு குறையுள்ள தம்பதியர்க்கு மக்கட்பேறு வேண்டும் என்று தீவிர ஆசையால் இது நேரிடும் என்று கூறுவர். காரணம் தெரியவில்லை. நான் திருப்பதியில் பணியாற்றிய போது (1960 - 77) ஏதோ ஒரு காரியமாக சென்னை வந்திருந்தபோது சென்னை மருத்துவக் கல்லூரியில் ஒரு கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு ஒவ்வொரு பகுதியாக பார்வையிட்டுக் கொண்டு வந்தபோது போலி கருப்பம் என்ற பகுதிக்கும் சென்று வந்தேன். மேற்குறிப்பிட்ட காரணத்தைத்தான் மருத்துவர் சொல்லி விளக்கியதாக நினைவு. தவிர எங்களுர்ப் பக்கம் (துறையூர், திருச்சி மாவட்டம்) என் தூரத்து உறவு உள்ள செல்வர் ஒருவர் வீட்டில் ஒரே மகன் உள்ள குடும்பத்தில் இத்தகைய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. பதினைந்து ஆண்டுகட்கு மேலாக பிள்ளைப் பேறு இல்லாத தம்பதியருக்கு போலிக் கருப்பம் நேரிட்டது. ஆறு ஏழு திங்கள் இது நீடித்தது. குடும்பத்தினர் மட்டற்ற மகிழ்ச்சியால் திருவரங்கம் சென்று இடம் அமைத்துக் கொண்டு வளைகாப்பு, சீமந்தம் முதலிய வைதிக நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி உறவினர்களுடன் மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஏதோ ஒருநாள் எல்லாம் பொய்யாய், பழங்கதையாய், மெல்ல மெல்ல"ப் போய்விட்டது. காற்றடைத்த கால்பந்தில் காற்று வெளியாவது போல் புஸ் என்று போய்விட்டது. எல்லோருக்கும் ஏமாற்றம். (0) இரட்டைப் பிறவிகள் : கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய உயிரணுக்களிலிருந்து மானிட உயிர் தோன்றுவதும் பல்வேறு சிக்கலான அமைப்புகளையும் பண்புகளையும் கொண்ட ஒரு மனிதன் உருப்பெறுவதும் வியப்பேயாகும். அதே சிறிய உயிரணுக்களிலிருந்தே இரண்டு, மூன்று, நான்கு என்று சில சமயம் ஒரே மாதிரியான பல குழவிகள் தோன்றுவதைக் கானும்போது நம்முடைய வியப்பு பன்மடங்கு