பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தமிழில் அறிவியல் செல்வம் (ஆ) 305 #05 GT solus (Fraternal twins): இவை இரண்டு முட்டைகள் கருவுறுவதனால் உண்டாவதாகும். சாதாரணமாக மாதத்திற்கு ஒரு முட்டைதான் முதிர்ந்து கருக்குழலில் செல்லும்; சில சமயங்களில் இரண்டு முட்டைகள் முதிர்ச்சியுற்றுச் சூற்பைகளிலிருந்து வெளிப்பட்டுக் கருக்குழலில் செல்வதுண்டு. ஒவ்வொரு முட்டையிலும் ஒவ்வொரு விந்தணு புகுந்து இரண்டு முட்டைகளும் கருவுறும். இவ்வாறு கருவுற்ற முட்டைகள் கருப்பையில் வெவ்வேறு இடங்களில் பதிந்து கொண்டு இரண்டு கோரியான்களில் வளரும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பனிக்குடமும், தனித்தனிக் கொப்பூழ்க் கொடியும், தனித்தனி நஞ்சும் இருக்கும். இவ்வாறு பிறக்கும் இரட்டைக்குழவிகள் உருவம், தன்மை, உயரம் முதலானவற்றில் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும் என்பதில்லை; ஒன்று ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவும். அமையலாம்; அல்லது. இரண்டும் ஆணாகவோ, பெண்ணாகவோ அமையலாம். இரண்டு முட்டைகளின் நிறக்கோல்கள் பிரியும்பொழுது இரண்டினுடைய நிறக்கோல்களும் ஒரே மாதிரியாக அமையும் என்று சொல்வதற்கில்லை. ஒரு முட்டையில் தாய் வழிப்பாட்டனிடமுள்ள நிறக்கோல்கள் அதிகமாகவும், மற்றொன்றில் தாய் வழிப்பாட்டி யிடமுள்ள நிறக்கோல்கள் அதிகமாகவும் அமையலாம். - மேலும், இந்த இரண்டு முட்டைகளும் வெவ்வேறு முறையில் அமைந்த நிறக்கோல்களைக் கொண்ட இரண்டு தனிப்பட்ட விந்தணுக்களால் கருவுறுகின்றன. இதனால் தான் இவை பல பண்புக் கூறுகளில் வேற்றுமையுடன் அமைகின்றன. இதனால்தான் நிறம் உரோம வளர்ச்சி, உயரம், உறுப்புகளின் அமைப்பு, தோற்றம் முதலானவற்றில் சாதார ண மாக சகோதர சகோதரி க ளிடம் காணப்பெறுவதைப் போலவே இவையும் வேறுபாடுகளுடன் அமைகின்றன. இத்தகைய இரட்டைப் பிறவிகள் சகோதர இரட்டைகள் எனவும் வழங்கப்பெறும். -