பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 475 (இ) இயல்பி கந்த இரட்டையர் : கருவுற்ற முட்டையிலுள்ள உயிரணுக்களின் தொகுதி இரண்டு பகுதிகளாகப் பிரியும்பொழுது முற்றிலும் இரண்டாகப் பிரியாமல் போகுமாயின் இயல்பிகந்த இரட்டைகள் பிறப்பதற்கு ஏதுவாகும். இவை வெவ்வேறு நிலைகளில் ஒட்டிய பாங்கில் பிறக்கும். இவற்றை ஒட்டுப் பிறவிகள் (Coniலed tயins) என வழங்குவர். முதன்முதலில் இத்தகைய பிறவிகளில் ஒன்று உ யி ரு டன் சயாம் நாட் டி லி ருந்து வந்த ைத க் கண்டதால்இவ்வகைப் பிறவினைகள் சயாம் இரட்டையர் (Stamesetயப்is என்று வழங்குகின்றனர். சாதாரணமாக ஒட்டுப் பிறவிகள் உடலில் ஒரு பகுதி (எடு. இடுப்பு, தலை, பக்கங்கள்) ஆகியவற்றில் ஏதாவது ஒரிடத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும். பெரும்பாலும் சயாம் இரட்டையர் அச்சு இரட்டையராகவே இருப்பர். ஆனால், ஒரு சிலர் சகோதர இரட்டையரின் இளஞ்சூல்கள் தொடக்கநிலையில் ஒன்றையொன்று நெருங்கி அழுந்திய நிலையில் அமைந்தால் இவ்வாறு ஒட்டுப் பிறவிகளாக அமைந்துவிடும் என்று நம்புகின்றனர். இன்னும் சிலர் ஒரு முட்டை இரண்டு விந்தணுக்களால் கருவுற்றால் இத்தகைய பிறவிகள் அமையலாம் என்றும் கூறுவர். இதை இரண்டு கொள்கைகட்கும் யாதொரு சான்றும் இல்லை. இளஞ்சூல் நிலையில் பிரிவது முற்றிலும் சரியாகப் பிரியாவிடில் சில சமயம் ஒருதலை, நான்குப் புயங்கள், நான்கு கால்கள் இவற்றையுடையதாகவும் அல்லது இரண்டு தலைகளையுடையதாகவும் அல்லது அக உறுப்புகளிலோ புற உறுப்புகளிலோ பல்வேறு விதமாக இரட்டித்தும் அரக்கப் பிறவிகள் தோன்றுவதுண்டு. வசுதேவருக்கும் தேவகிக்கும் சிறையில் பிறந்த கண்ணனுக்கு நான்கு புயங்கள் இருந்தன என்றும், இரண்டு பின்னர் மறைந்தன என்றும் ஒருவரலாறு உண்டு. பெரும்பாலும் இத்தகைய பிறவிகள் பிறப்பதற்கு முன்பதாகவே மரித்துவிடும். ஆனால் 1937இல் இரஷ்யாவில் இரண்டு தலைகள், ஒருடல், நான்கு புயங்கள்,