பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 477 அந்தோவன் வயிற்றெழுந்த பசியடங்கிற் றில்லையென அழுமால் ஒருசேய், சிந்தாத கஞ்சிவார்க் கிலையெனக்குஅன் னாய் எனப்பொய் செப்பும் ஓர்சேய்; முந்தார்வந் தொருசேய்மி சையப்புகும்போது இனியோர்சேய் முடுகி யீர்ப்ப நந்தாமற்று அச்சேயும் எதிர்ஈர்ப்பச் சிந்துதற்கு நயக்கும் ஓர்சேய்' என்று கவிஞர் வருணித்திடுவர். இதனால் குழவிகளில் பெரும்பாலோர் சிறு வயதினாராயிருந்தனர் என்று ஊகம் கெய்யலாம். ஆகவே, சுசீலைக்குப் பல குழவிகளையுடைய சில குழந்தைப் பேறுகள் ஏற்பட்டிருத்தல் வேண்டும் என்று கொள்வது பொருத்தமுடையதாகின்றது. இப்படிக் கொண்டால்தான் கவிஞருடைய கற்பனைக்கும் அறிவியல் அடிப்படையில்.நல்ல விளக்கமும் ஏற்பட ஏதுவாகும். இரண்டுக்கும் மேற்பட்ட பிறவிகள் : மருத்துவ ஏடுகளில் முக்கோவைக் குழவிகள் Triplets), நான்கு கோவைக் குழவிகள் (guadruplets) ægí & G&T«m«u& &gaïa.<it (Quintupletsi, எண்கோவைக் குழவிகள் (Octuplets) ஏற்பட்டிருந்தமை பதிவாகியுள்ளன. காலச் சுருக்கம் கருதி ஐங்கோவையை மட்டிலும் விளக்குவேன். ஐங்கோவைக் குழவிகள் : இவைபற்றி அறிஞர்கள் ஆய்ந்து பல விளக்கங்களை வெளியிட்டுள்ளனர். இந்த ஐந்து குழவிகளும் பெண்களாக இருப்பதால் டயானா சகோதரிகள்)" அவை ஒரு முட்டையிலிருந்தே தோன்றியவையாகும் என்பது வெளிப்படை எனினும் இதுவும் 15. குசேலோபாக்கியானம் குசேலர் மேற்கடலையடைந்தது 10 - 1 16 அமெரிக்காவில் ஓர் ஏழைப் பெண்ணுக்கு இப்பேறு ஏற்பட்டது. அரசு அக்குழவிகளைத் தத்து எடுத்து உயர்கல்விக்கு வாய்ப்பு அளித்தது. பெண்கள் ஐவரும் நல்ல கல்வி பெற்றனர். அரசு அவர்கட்கு உயர் பதவிகளையும் அளித்தன. அவற்றில் அவர்கள் சிறப்பாகப் பணியாற்றிப் புகழ் பெற்றனர் எவராவது ஒருவர் ஏதாவது ஒரு சிறு நோய்வாய்ப் பட்டால் ஏனைய நால்வரையும் அது தாக்குமாம். கடைசிப் பெண் இறந்தாள். இதற்குமேல் பதிவாகவில்லை.