பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' శ్ర தமிழில் அறிவியல் செல்வம் பல்வேறு விதமாக நிகழலாமல்லவா? ஒரு முட்டையிலிருந்து தொடங்கினால், அது முதலில் இரண்டாகப் பிளவுபடும். அதன்பிறகு அஃது இங்ங்னம் பிரியலாம். () ஒரு பாதி இரட்டித்து, இரண்டித்த பகுதிகள் மீண்டும் இரட்டித்து நான்கு குழந்தைகளாகலாம். இரண்டாவது பாதி ஒரு தனிக் குழந்தையாக வளரலாம். (i) அல்லது இரண்டாகப் பிரிந்த பகுதிகள் இரண்டும் இரட்டித்து நான்காகலாம். இந்த நான்கு பகுதிகளில் ஒன்று மீண்டும் இரண்டாகப் பிரியலாம். இக்குழவிகள் இவண் குறிப்பிட்ட இரண்டாவது முறைப்படிதான் பிரிந்திருக்க வேண்டும் என்று அறிவியலறிஞர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர். இங்கு ஆறு, ஏழு, எட்டு குழவிகள் கூட தோன்றுவதற்கு வழியுண்டு இவ்வாறு தோன்றியதில் ஐந்துதான் பிழைத்திருக்க வேண்டும். . (1) வல்லியலார் யார்? : இந்த உலகம் தோன்றிய நாள் தொட்டுப் பெண்களை ஆண்கள் மெல்லிய்லார் என்று திருநாமம் சாத்தி வழங்கி வருகின்றனர். எப்படியோ இந்தப் பெயரும் நிலைத்து விட்டது. ஆனால் ஆய்ந்து ஆழ்ந்து நோக்கினால் இவர்களே வல்லியலார் என்பது தெளிவாகும். ஒருமுறையில் நோக்கினால் மெல்லியலார் என்ற இப்பெயர் முற்றிலும் தவறு என்பது தெரியவரும். உடல், நலத்தையும் உடல் நிலையையும் பொறுத்த வரையில் பிறப்பதற்குமுன்பிருந்தே வாழ்க்கை முழுவதிலும் பெண்களே ஆண்களை விட உயர்நிலையில் உள்ளனர் என்பது தெரிய வரும். காரணங்கள : (1) முதலாவதாக, உடல் அமைப்பிலும் அது செயற்படும் வகையிலும் பொதுவான பால் - வேற்றுமைகள் உள்ளன. இவ்வேறுபாடுகள் நோய்களைத் தடுப்பதற்கும் அவற்றைத் தாங்குவதற்குமான வசதிகளைப் பெண்களுக்கு அளிக்கின்றன.