பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 479 (ம இரண்டாவதாக, நேர்முறையில் மரபு வழியாக இறங்கும் நோய்களாலும், குறைகளாலும் ஆண்களே எளிதாகப் பீடிக்கப் பெறக் கூடியவர்களாக உள்ளனர். (iii) மூன்றாவதாக, சூழ்நிலைபற்றிய கூறுகளும் பெண்களுக்குத் துணையாகவுள்ளன. மேற்கொள்ளும் தொழில்கள், பழக்க வழக்கங்கள், நடத்தைகள் இவை ஆண்களை அதிக விபத்துக்குள்ளாக்குகின்றன. மேலும் சில : (அ) பிறப்பதற்கு முன்னரே கருவுலக வாழ்வில் ஆண் குழவிகட்கே பல்வேறு இடர்கள் நேரிடுகின்றன. பெண் குழவிகளைவிட தாயின் வயிற்றிலே சாகும் ஆண் குழவிகளின் தொகையே அதிகம். (ஆ) பிறக்கும்பொழுதில் இறப்பதிலும், பிறவி சார்ந்த இயல்பிகந்த பண்புகளுடன் பிறப்பதிலும், முதலாண்டிலேயே மண்ணுலக வாழ்வினை நீப்பதிலும் பெண் குழவிகளை விட ஆண் குழவிகள் 30 சதவிகிதம் அதிகம் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். (இ) ஆண் குழந்தையொன்றும் பெண் குழவியொன்றும் வாயிற்படியில் தடுமாற்றம் அடைந்து விழுவதாக வைத்துக் கொண்டால் ஆண் குழவியே அதிக விபத்தினை அடைகின்றது. பிள்ளைப் பருவத்தில் இருவரிடையேயும் முக்கியமான விபத்துக்கள் ஏற்படுவது குறைவு. அடுத்து, (அ) இப்பருவத்திலும் ஆண் குழவிகள் மரிப்பதை அதிகமாகக் காண்கிறோம். (ஆ) குமரப்பருவத்தில் மரிக்கும் நிலை உயர்ந்து கொண்டே சென்று நடுப்பருவத்தில் தெளிவாக உயர்ந்த நிலையைக் காண முடிகின்றது. (இ). நீரிழிவுநோய், பெண்களுக்கே உரிய புற்று நோய்கள் (எ.டு கொங்கை, கருப்பை, சூற்பை இவற்றில் ஏற்படுவன) 堡-13。 . .