பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 தமிழில் அறிவியல் செல்வம் தொண்டைக் கழலைநோய் இவற்றில் மரிப்பவர்களை நீக்கினால், ஆண்கள் இறப்பதே அதிகமாகக் காணப் பெறுகின்றது. (ஈ) சூழ்நிலை பற்றிய கூறுகளை இருபாலாரிடையே ஒன்றுபோல் இருக்குமாறு செய்து விட்டாலும், பெண்களே நல்லவாய்ப்புகளைப் பெறுகின்றனர். இந்நிலையிலும் ஆண்கள் இறப்பதே அதிகமாக உள்ளது. காரணம் : ஒருபெண் தன் x நிற்க்கோல்களுள் ஒன்றில் பின்தங்கும் தீய ஜீனைப் பெற்றால் அவளுடைய மற்றொரு x நிறக்கோலில் சாதாரணச் செயலில் பங்கு கொள்வதற்கு நன்னிலையிலுள்ள ஒரு ஜீன் உள்ளது. மோட்டார் வண்டியின் சக்கரத்தின் டயர் வெடித்துப் போகுங்கால் சேமச் சக்கரத்தின் டயரைப் பயன்படுத்துவதுடன் இதனை ஒப்பிடலாம். ஆனால் ஆண் தன்னுடைய ஒரே ஒரு X நிறக்கோலில் இத்தகைய தீய ஜீனைப் பெற்றால், அவனுடைய நிலை மோசமாகின்றது; அவனுடைய மிகச்சிறிய y நிறக்கோலில் இத்தகைய ஜீனை ஈடுசெய்வதற்கான ஒரு ஜீன் பெரும்பாலும் இருப்பதில்லை. இந்நிலை சேம சக்கரத்துடன் கூடிய டயர் இல்லாத மோட்டார் ஒட்டியின் நிலையைப் போன்றது. x நிறக்கோலில் பல குறைகளுக்குக் காரணமாகவுள்ள பின் தங்கும் பல ஜீன்கள் இருப்பின், அவனுடைய அவக்கேடான நிலையைச் சொல்ல வேண்டியதில்லை. இதனால்தான் பிறப்பதற்கு முன்பிருந்தே ஆண் குழவிகளின் நிலை பரிதாபமாக வுள்ளது. ஆணிடமுள்ள x நிறக்கோல் தன் தாயிடமிருந்தே வரக்கூடுமாதலால், பெரும்பாலான குறைகளை ஆண்கள் தம் தாயின் வழியாகவே பெறுகின்றனர். () ஹெமோஃபீலியா (Hemophilia : பால் இணைப்பு நோயில் இது முக்கியமானது. இது மரபுவழியாக இறங்கும் நோய், x நிறக்கோலில் அமைந்துள்ள குருதியுறைதலுக்குக் காரணமாகவுள்ள ஜீன் குறையுடனிருக்கும்பொழுது இந்த