பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 181 நோய் உண்டாகின்றது. இத்தகைய நோயுள்ளவர்கள் இளமையிலேயே மரிப்பது வழக்கம், ஆயினும், இவர்கள் இளமைப்பருவம் கடந்து நடுப்பருவம் வரையிலும் தப்பிப் பிழைத்தால் (அதற்குமேல் பிழைப்பது அருமை) மூட்டுகளில் குருதிப் பெருக்கெடுத்து முடமாகி விடுவர். இத்தகைய நோய் மிகவும் அரிதாகவே ஏற்படுகின்றது. சாதாரணமாக இந்நோய் ஏற்படுவதற்குக் காரணமான ஜீன் சடுதி மாற்றத்தால் (Mutation) ஏற்படுகின்றது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இம்முறையில் ஜீன்களால் இந்த நோய் உண்டாகாமல் இருப்பின் இனப்பெருக்க வயதடைவதற்கு முன்னரே ஆண்கள் இறப்பதன்மூலம் இந்நோய் நீண்ட நாட்களுக்கு முன்னரே இவ்வுலகத்தை விட்டே நீங்கியிருக்கும். பெண்களிடம் இந்நோய் தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் பெறும் ஒவ்வொரு x நிறக்கோல்களிலுள்ள ஒவ்வொரு ஜீன் வீதம் சேரும் இரண்டு குறைபாடுள்ள ஜீன்களால் உண்டாகின்றது. இத்தகைய நோயாளி இருப்பது அரிது. இங்ங்னம், இருமடங்கு ஹேமோஃபீலியா குழவிகள் கருப்பத்திலேயே அல்லது பிறந்தவுடனேயே மரித்து விடுகின்றன. - (i) நிறக்குருடு (Colour blindness): இது குடிவழியாக வரும் 'பால் - இணைப்புள்ள நிலைகளால் ஏற்படும் பெருவழக்காகவுள்ள நோயாகும். இது செயற்படுவது ஹெமோஃபீலியா செயற்படுவதைப் போன்றதே. நிறக்குருடுக்குக் காரணமான ஜீன் x நிறக்கோவில் உள்ளது. ஆணிடம் அமையும் நிறக்கோலில் இந்த ஜீன் இருப்பின் அவன் நிறக்குருடனாக இருப்பான். இதுவும் தாய் வழியாகவே அவனை வந்தடைகின்றது. ஒரு பெண்ணிடமுள்ள ஒரு நிறக்கோலில் நிறக்குருடுக்குக் காரணமான ஜீன் அமைந்து மற்றொரு நிறக்கோல் 1. நிறக்குருடு - இந்நோயுள்ளவர்கள் செந்நிறத்தையும் பச்சை நிறத்தையும் பாகுபடுத்தி அறியமுடியாது. இக்குறையுள்ளவ்ர்கள் விமானப் படையில் பணியாற்ற முடியாது.