பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 483 காரணமாக ஒரு குறையிருப்பின், ஒவ்வொருவரு மகளும் (மகன் அல்லன்) இக்குறையை விளைவிக்கும் ஜீனைக் கொண்ட X நிறக் கோலினைப் பெறுவாள். தாய்க்கு இக்குறையிருப்பின் மகனோ மகளோ இக்குறையைப் பெறுவர். குடிவழியாகப் பெண்கள் மூக்கில் குருதிப் பெருக்கெடுத்தல், பல்லின் இனாமலின் குறை ஆகியவை பெறுவதற்கு இதுவே காரணமாகும். இவை இரண்டும் அரியனவாக ஏற்படும் குறைகளாகும். x நிறக்கோலிலும் y நிறக்கோவிலும் உள்ள ஒருவகை ஜீன்கள் இருபாலாரிடமும் சரி சமமாகக் குறைகளை cologroñé@5th. (p(9|filpéé5(5(5) (Total colour blindness) @##65 எடுத்துக் காட்டாகும். இக் குறை யு ள்ள வர்களின் கண்ணிலுள்ள கண் திரையில் வண்ணங்களை வேறுபடுத்திக் காட்டும் கூம்புகள் (Cones) இருப்பதில்லை. இவர்கள் எல்லா நிறங்களையும் கறுப்பு வெளிறு (Greg வண்ணங்களாகவே காண்பர். x நிறக்கோலிலும் y நிறக்கோலிலும் சரி சமமாக இணையக் கூடிய ஜீன்களால் விளைவிக்கப்பெறும் சுமார் பத்து நிலைகள் இதுகாறும் கண்டறியப் பெற்றுள்ளன. (t) வழுக்கை : ஆண்களிடம் மட்டிலுமே இக்குறைகாணப் பெறுகின்றது. பெண்களிடம் இக்குறை பெரும்பாலும் காணப்பெறுவதில்லை. அப்படிக் காணப்பெற்றும் ஆண்கள் மயிர்கள்ை இழக்கும் அளவுக்கு அவர்கள் இழப்பதில்லை. காரணம் : பால்வரையறை (Sex limited) ஜீன் என்ற ஒருவகைத தீய ஜீன் இருப்பதாகவும், சாதாரணமாக வழுக்கை விழுவதற்கு இவ்வகை ஜீனின் ஒர் இணையே மரபு வழியாக இந்நிலையை உண்டாக்குகின்றதென்றும் கால்வழியியல் அறிஞர்கள் கருதுகின்றனர். பால் இணைப்பு ஜீன்களைப் போலன்றி பால்வரையறை ஜீன் x நிறக்கோவில் சுமந்து செல்லப் பெறுவதில்லை; அஃது இருபாலாருக்கும் பொதுவாகவுள்ள ஏதாவது ஒரு நிறக்கோலில் சுமந்து செல்லப்பெறுகின்றது. எனவே, வழுக்கைக்குக் காரணமாகவுள்ள ஜீன் இருப்ாலார் வழியாகவும்