பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 தமிழில் அறிவியல் செல்வம் இறங்குகின்றது. ஆனால் இருபாலாரிடையேயும் அஃது ஒரே மாதிரியாகச் செயற்படுவதிலை. அஃது ஆணிடம் ஓங்கி நிற்கும் ஜீனாகச் செயற்பட்டு வழுக்கை மண்டைன்டி விளைவித்து விடுகின்றது. பெண்ணிடம் அது வரையறை செய்யும் பின்தங்கும் ஜீனாகச் செயற்படுகின்றது. இவ்வாறு நேரிடுவதற்கு ஆண் ஹார்மோன்களே காரணம் என்று சோதனைகள் மூலம் கண்டுள்ளனர். ஆயினும் வழுக்கைக்குக் கார ண மான p ன் இவ் விளை விற்கு மிகவும் இன்றியமையாதது. ஒரு குறிப்பிட்டவரிடம் வழுக்கை உண்டாகுமா என்பதை முன்னதாகவே அறிய முடியுமா? ஆம்; ஒரளவு அறிந்து கொள்ளலாம். தந்தையிடம் வழுக்கை இருப்பின் அவர்களுடைய மைந்தர்களில் பாதிப்பேரிடம் வழுக்கை ஏற்பட வாய்ப்பு உண்டு. அவருடைய மனைவியின் கால்வழியில் ஆண்களிடம் வழுக்கை வழக்கமாகக் காணப்பெறின் இந்த வாய்ப்பு இன்னும் அதிகரிக்கும். ஒருவருடைய பெற்றோரிடம் "இரண்டு - வழுக்கை ஜீன்கள்" வகையினரா, "ஒரு வழுக்கை ஜீன் உடையவரா, வழுக்கை இல்லாத ஜீனை உடையவரா என்பதைப் பொறுத்தே வழுக்கைப் பண்பு இறங்கும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அவருடைய தாய் வழியாகவும் தந்தை வழியாகவும் உள்ள ஆண்களை மட்டிலும் கூர்ந்து நோக்கியும் மூத்த சகோதரர்களைக் கூர்ந்து நோக்கியும் உத்தேசமாக ஊகம் செய்து கூறிவிடலாம். இக்கூறிய செய்திகளையெல்லாம் சேர்த்து நோக்கினால் யார் மெல்லியலார்? யார் வல்லியலார் என்பது தெளிவாகும். ஆண்களே பெண்களைவிட வலியவர்கள், சிறுவர்கள் தம்முடைய மெல்லியல் சகோதரிகளைவிட அதிகத் திண்ணியர்களாக இருத்தலின் அவர்களை அதிகம் கவனித்தல் வேண்டா என்ற பழைய பிழையான வாதத்தை (Old filaru), குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. பெரிய எலும்புகளும் பழுவான தசைகளும்