பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 485 நோய்களையும் இறப்பினையும் தாங்கும் ஆற்றல் வாய்ந்தவை என்ற எண்னத்தால் எழுந்தவாதம் இது. ஆற்றங்கரையில் ஓங்கிப் பெருத்த அரசமரம், ஆற்றோரத்தில் நலிந்ததாகக் காணப்பெறும் மெல்லிய நாணற்புல் இவற்றுள் எது பெரும்புயலுக்குத் தாங்கி நிற்கும் என்பதை ஈண்டு நினைவு கூர்ந்தால் உண்மையில் வல்லியலார் பெண்களே என்பது தெளிவாகும். (ii) நெடுநாள் வாழ்வு : தமது வாழ்நாளை வரையறுத்துச் சொன்னவர்கள் இந்த உலகில் தோன்றவில்லை. இந்த உண்மையைப் பாண்டியன் .நெடுஞ்செழியனுக்கு மாங்குடி மருதனார் கூறித் தெருட்டுகின்றார். மறக்கள வேள்வியில் ஊன்றிக் கிடந்த அவனை அறக்கள வேல்வியில் ஈடுபடுமாறு அறிவுறுத்துகின்றார் சேரன் செங்குட்டுவனுக்கும் மாடல மறையோன் வாய் மொழியாக இந்த உண்மையை உரைத்து அவனையும் இந்த வேள்வியின்டால் ஆற்றுப்படுத்துகின்றார் இளங்கோ அடிகள். ஆயின், தொண்டரடிப் பொடியாழ்வார், வேதநூல் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவ ரேனும் பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்' என்று மனிதனுடைய ஆயுட்காலத்தை துறு ஆண்டுகள் என்பதாக உரைத்திடுவர். கிறித்தவ மறையாகிய விவிவிலியத்திலும் சிலருடைய ஆயுட்காலம் கணக்கிட்டுக் கூறப்பெற்றுள்ளது. ஆயினும் உலகிலுள்ள எல்லாப் பகுதி மக்களிடமே ஒவ்வொருவரும் இந்த உலகிற்கு ஊழின் வழியால் (பிராரப்தத்தால் நுகர் வினையால்) வருகின்றனர் என்றும், அவர்கள் இந்த உலகில் தங்கும் காலத்தை ஊழ் முன்னரே வரையறை செய்துள்ளது என்றும் நம்புகின்றனர். 8 18. திருமாலை - 3.