பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ii) குருதியமுக்கம், நாடித்துடிப்பு : இவையும் நாம் வாழ்நாள்எல்லையினை ஒரளவு அறுதியிடுகின்றன. (tu) திருமண வாழ்க்கை : திருமண வாழ்க்கை நடத்துபவர்கள் மணமாகாத மாணிகளைவிட அதிக நாட்கள் வாழ்வதாகத் தோன்றுகின்றது. மணவாழ்க்கை யிலுள்ளோருக்கு வாழ்க்கை வசதிகளும், கவனிப்பும், உணர்வுகளின் நன்னிலையும் இருப்பதே இதற்குக் காரணம் என்று கருதலாம். (ப) குடி : குடிப்பழக்கம் வாழ்நாளைக் குறைக்கின்றது. என்பதில் கருத்து வேறுபாடு உண்டு ஆயினும் ஒழுக்க நூல்ார் இதனைக் கடிகின்றனர். - . (பப் புகை பிடித்தல் : இதுவும் அளவுக்கு மீறினால் தீங்கு பயக்கின்றது. நுரையீரல் புற்று நோயினை விளைவிப்பதாகக் கண்டறிந்துள்ளனர். எ.டு. நிதானமான குடிப்பழக்கமும் நாளொன்றுக்கு 100 சிறுசுருட்டு புகைத்த ஒருவர் 80 அகவையைத் தாண்டி வாழ்ந்ததை அறிவேன். இப்பழக்கங்களின்றேல் அவர் நூறாண்டுகட்குமேல் வாழ்ந்திருப்பர் என்பது என் கருத்து. இவருக்கு இரண்டு திருமணம் முதல் மனத்தில் சில மக்கள்; இரண்டாவது திருமணம் கன்றுகளுடன் பசுவை வாங்கின கதை. இந்தப்பகவும் திருமணத்திற்குப் பிறகு பல கன்றுகளை ஈன்றது. பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்தவர். துணைவேந்தர் பதவி ஏக்கம் உண்டு. அதனால் மரித்தனரோ என்ற ஊகமும் உண்டு இக்கூறியவற்றை ஒருங்கு வைத்து ஆய்ந்தால் நம்முடைய வாழ்நாள் அடியிற்கண்டவற்றைப் பொறுத்துள்ளது என்பது தெரியவரும், முதலாவது: நம்முடைய வாழ்க்கை தொடங்குவதையும், அதன்பிறகு நாம் வாழ்க்கை நடத்தின நிலைமைகளையும் தற்சமயம் வாழும் நிலைமைகளையும், பணியாற்றும் இடம் முதலியவற்றையும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதையும் பொறுத்தது தான் சூழ்நிலை என்பது.