பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#92 - தமிழில் அறிவியல் செல்வம் பல்கலைக் கழகத்தில் உயிரியல் - வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இங்கு இவருக்குத் தம் பணியில் முழு சுதந்திரம் உண்டு. தம்முடைய ஆய்வின் மூலம் இவர் கண்டறிந்தவை இருவித மூட்டைப் பூச்சிகள் (Superbugs.இவை உயிரியல் - பொறியியல் வழியாகப் படைத்த துண்மங்கள் (Bactaria) ஆகும். இவை தம்மால் படைக்கப் பெற்ற ஒரு புதிய உயிர் வகை அன்றென்றும், இவை ஏற்கெனவே இருக்கும் நுண்மங்களின் சிறிது மாற்றமடைந்த உயிர் வகை என்றும், தமது தேவைக்காக இவ்வாறு மாற்றப் பெற்றதென்றும் இவர் கூறுகின்றார், இதைத்தான் கால்வழியியல் - பொறியியல் rெetic engineerin) என்கின்றார். இவர். இவருக்குத் தேவையான நிதியை அரசிடமிருந்தும் தனியார் நிறுவனங்களிலிருந்தும் பெறுவதாகக் கூறுவார். இவர் கண்டுபிடிப்பு பற்றிய வழக்கு ஒன்றும் பிறந்தது. உயிருள்ள பொருளை கண்டறிவதுபற்றிக் கருத்துமாறுபாடு இருந்தது. இவர்மேல் நிலை நீதிமன்றம் சென்று இவ்வாறு கண்டறிவது தம் உரிமை என்றும் வாதாடி தனிஉரிமைப் பத்திரத்தையும் (Patent) பெற்றார். இதனால் இவர் புகழ் எங்கும் பரவியது. பூச்சிகளின் பயன் : எண்ணெய் உற்பத்திச் சாலைகளில் பெரிய அளவில் பயன்படுகின்றன. . - - (அ) ஒரு பூச்சி - ஒரு புதிய பொருளை உண்டாக்குகின்றது. இப்புதிய பொருள் திடநிலையிலுள்ள பண்படா எண்ணெய் (Crudeயைக் குழம்பு நிலைக்கு மாற்றி திரவ நிலைக்குக் கொணர்கின்றது. கைவிடப்பெற்ற சில எண்ணெய்க் கிணறுகளிலுள்ள எண்ணெய் பம்பு வழியாக அனுப்ப முடியாத தடித்த நிலையில் உள்ளது. இதனை இந்தப் பூச்சியைக் கொண்டு திரவநிலையாக்கப் பெறுகின்றது. - (ஆ) மற்றொரு பூச்சி : எண்ணெய்க் குழாயில் உட்புறச் கவர்களில் ஒட்டிக் கொள்வதைத் தடுத்து எண்ணெயின் பாகுநிலையைக் (Viscosite) குறைத்து ஒட்டத்தை மிகுவிக்கின்றது.