பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 195 tit) அறிவியல் துறையில் நோபெல் பரிசு பெற்ற விற்பன்னர்கள் உலகில் மிகமிக முன்னேற்றமுள்ள ஆய்வகங்களில் உயிரியல் துறைகளைப் பற்றி ஆராயும் துணுக்கங்கள் ஆய்வாளர்கள் இவர்கள் ஒன்று கூடுதல் என்பது மூன்றாவது உலக அறிஞர்கட்கு உண்மையான அறிவியல் அறிவுக் கருவூலம் அரிதாகக் கிடைக்கக் கூடிய வாய்ப்பு தருவதுமாகும். () பெரும்புகழ்பெற்ற இந்திய அறிவியல் அறிஞரான டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களும் தம்முடைய தலைமை உரையில் தாவர விலங்கியல் ஜீன்களைக் காப்பது பற்றிய இன்றியமையாமையைக் குறிப்பிட்டது மிகவும் பொருத்தமாகும். (பi) இந்த மாநாட்டில் தாய் நாட்டிலிருந்துசென்று வெளிநாடுகளில் ஆய்வுப் பணியாற்றும் முன்னிலையில் திகழும் இந்திய அறிவியலறிஞர்கள் கலந்து கொண்டமை ஒரு முக்கியமான சிறப்பு. இவர்கள் கால்வழிஇயலில் கண்டறிந்த அறிவுக்கருவூலம் கோடிட்டுக் காட்டக் கூடியதாக அமைந்திருந்தது. கவனத்திற்குரியவை : () அணுத்திரளை உயிரியல் : இப்பகுதி பெரும்பாலோரின் கவனத்தைக் கவர்ந்தது. பல்லுாழி காலமாக எத்தனையோ வித தாவர வகைகள் கால மாற்றத்தையும் கால மாற்றத்தின் புரட்சியினையும், மழையின்மையையும், வெயிலின் கொடுமையையும் தாங்கிக் கொண்டு தப்பிப் பிழைத்துள்ளன. இங்ங்னம் தாக்குப்பிடித்துள்ள தாவர வகைகளின் இடத்தை அதிகப் பயன்விளையும் தாவரவகைகள் பிடித்துக் கொண்டு விட்டன. பேராசிரியர் ஃபிராங்கெல் என்பார் இவ்வகைத் தாவர ஜீன்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை கூறி இவ்வகைகளை அழியவிடக் கூடாது என்றும் எச்சரித்தார். இவற்றைப் பாதுகாப்பதுடன் இவற்றோடு தொடர்புள்ள ஒவ்வொரு பயிர்வகைகளையும் (Crop பarieties) பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கடந்த முப்பது நாற்பது ஆண்டுக் காலத்தில் கோதுமை நெல், கரும்பு முதலியவற்றின்