பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ தமிழில் அறிவியல் செல்வம் கதிரவனின் தேய்வு : ஒவ்வொரு நொடியிலும் கதிரவனிடமிருந்து ஒன்றரைக் கோடி கோடி குதிரைத்திறன் (Horse Poயer அளவு கொண்ட ஆற்றலைப் பூமி பெறுகின்றதாக அறிவியல் அரிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். இதில் மூன்றில் ஒரு பகுதி ஏரி கடல் முதலிய நீர் நிலைகளிலிருந்து நீரை ஆவியாக மாற்றுவதற்குப் பயன்படுகின்றது. இவ்வாறு நீராவியாகச் செல்லும் நீர்தான் பிறகுமலைகளின் உச்சியில் மேகமாக நின்று மழையாகப் பொழிகின்றது. மழை நீர் ஆறுகளாகப் பாய்வதனால் அருவிகள் waterfalls) உண்டாகின்றன. உலகிலுள்ள எல்லா ஆறுகளிலும் ஒடுகின்ற நீரின் ஆற்றலைக் கொண்டு சுமார் 35 கோடி குதிரைத்திறன் அளவு ஆற்றலைப் பெறலாம் என்று மதிப்பிடுகின்றனர். கதிரவனின் வெப்பத்தையொட்டியே காற்றுகளும் வீசுகின்றன; பருவக்காற்றுகளால்தான் மழையும் பெய்கின்றது. உழவுத் தொழில் நடைபெறுவதற்குக் கதிரவனே முதற்காரணம் ஆகிறான். இத்தனை நிகழ்ச்சிகட்கும் நெருப்புக் கோளம்போல் உள்ள கதிரவன் ஒவ்வொரு நொடிக்கும் நாற்பது இலட்சம் டன் அளவு தேய்ந்து அழிகின்றமையே காரணமாகும். தாவரங்கள் கதிரவன் ஆற்றலைப் பெறல் : தாவரங்கள் கதிரவன் ஆற்றலைப் பெறுவதால்தான் ஒளிச் சேர்க்கை (Photo -sgnthesis என்ற ஓர் அற்புத நிகழ்ச்சி நடைப்பெறுகின்றது. இந்த நிகழ்ச்சிதான் மன்பதை உய்யக் காரணமாக அமைகின்றது. தாவரங்கள் காற்றிலுள்ள கரியமில வாயு, வேர்களின் மூலம் பெறும் நீர் இவற்றை உட்கொண்டும், கதிரவன் ஒளிக்கதிர்களாகவும் வெப்பக் திர்களாகவும் உமிழும் ற்றலைத் துணை கொண்டும் கார்ப்போ ஹைரேட்டுகள் (நெல், கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவை) போன்ற பொருள்களைச் சேமித்து வைக்கும் நிகழ்ச்சிதான் ஒளிச்சேர்க்கை என்பது இந்த நிகழ்ச்சியினால்தான் புரோட்டீன்கள் (துவரை, உளுந்து, நிலக்கடலை, எள், கொள், 5. குதிரைத் திறன் - House-Poயer திறமை வாய்ந்த குதிரைகள் வேலை செய்யும் திறனின் சராசரியை அளவிட்டுக் கண்டது 650 இராத்தல் உள்ள பொருளை ஒரு விநாடி நேரத்தில் ஓர் அடி உயரம் தூக்கக் கூடிய திறன். இது 746 வாட்டுக்குச் (Watt) சமம். ஒரு கிலோ வாட் என்பது சுமார் : ; குதிரைத் திறன்.