பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தமிழில் அறிவியல் செல்வம் மேம்பாட்டில் மிகப் பெரிய வெற்றியைக் கண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். இவையெல்லாம் கலப்பினத்தில் (Hgbri) திருவிளையாடல் என்பதைக் கோடிட்டுக் காட்டினார். இத்துறைபற்றிய பல துணுக்கமான உடன்பயன்படக் கூடிய கருத்துகள் பரிமாறிக் கொள்ளப் பெற்றன. - () ஜெனிட்டிக் பொறியியல் : இஃது அண்மையில் கண்டறியப் பெற்ற ஓர் அற்புத பொறியியல் நுணுக்கத் துறை. இதனால் பல்வேறு வகைப்பட்ட ஜீன்களைப் புதியனவாகப் படைக்க முடிகின்றது. அணுத்திரளை உயிரியல் பெருங்கொடை பற்றி அழுத்தம் கொடுத்துப் பேசினர் இரண்டு ஆஸ்திரேலியக் கால்வழி விற்பன்னர்கள். தாவர, விலங்கு மானிட பாக்டீரிய உயிர்ப் பொருளின் அமைப்பு பற்றிப் பேராசிரியர் சி.இ. ஸ்கவ்கிராப்ட் என்பார் தெளிவாக எடுத்துரைத்தார். ஒருவகையான தாவர இனத்தின் உயிரணுப்பாட்டு முறைகளில் இம்முறைகள் ஜெனிடிக் பொறியியல் முறையைச் சார்ந்தவை) பல்வேறு ஜீன்களைப் பேரளவில் விளைவிக்கலாம் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டினார். சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாத பல நுணுக்கமான கருத்துகள் மாநாட்டில் வெட்ட வெளிச்சமாயின. (iii) கனவு : மாநாட்டிற்குப் போந்திருந்த பல அறிவியலறிஞர்கள் ஜெனிட்டிக் பொறியியலின் நற்பயன்கள் யாவும் மூன்றாவது உலக மாநாடுகட்குப் பன்னெடுங் காலத்திற்குக் கனவாகவே இருக்கும் என்பதை உணர்ந்தனர். பல நாடுகளால் அமைக்கப் பெற்ற கூட்டவைகள் (Multinational corporation) உயிரியல் தொழில் நுணுக்கமுறைகளை இறுக்கமாகப் பூட்டிவைத்த உரிமைப் பத்திரங்களாக வைத்திருக்கும் என்றும், அமெரிக்காவில் மட்டிலும் 500 உயிரின நிறுவனங்கள் உள்ளன என்றும் அவற்றின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் பெருகி வருகின்றன என்றும் கவலை தெரிவித்தனர். ஒர் இந்திய உயிரியலறிஞர் தொழில் நுணுக்கமுறையிலும் பொருளாதார முறையிலும் இந்த மூன்றாவது உலக நாடுகள் முன்னேற்றமடைந்த நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை இன்னும் பல்லாண்டுகட்கு நிலைபெற்றிருக்கும் என்றும் சொல்லியே விட்டார்.