பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 197 வேறுசில குறிப்புகள் : இம்மாநாட்டின் நலங்களாகவும் செய்திகளாகவும் வேறு சில குறிப்புகளையும் காட்டலாம். () மலேரியா அம்மைப்பால் (Malariaயaccine) உற்பத்தித் துறையில் ஒரு முக்கிய துறை நுணுக்கம் கண்டறியப் பெற்றுள்ளது. நியூயார்க் பல்கலைக் கழகம் கண்டறிந்த இந்த அம்மைப்பால் கண்டறியும் முறையை உரிமைப் பத்திரமாக்கிக் கொண்டது. உலக சுகாதார அமைப்பு (WHO) செய்யுமாறு அமெரிக்க நிறுவனம் ஒன்றைக் கேட்டது; உலக சுகாதார நிறுவனம் அதனை மறுத்துவிட்டு வேறு அமெரிக்க நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டது. விற்பனைத் தனி உரிமை இல்லாது உற்பத்தி செய்ய மறுத்து விட்டன. அவை, நியூயார்க் பல்கலைக் கழகம் உலக சுகாதார அமைப்பினின்றும் நிதியுதவி பெற்று மூன்றாவது உலக நாடுகளிலிருந்து சேகரிக்கப் பெற்று வழங்கப் பெற்ற ஏராளமான குருதி ஊன்நீரையும் கொண்டு இந்த ஆய்வை நிகழ்த்தினாலும், உலக சுகாதார அமைப்பு அமெரிக்க மருந்து நிறுவனங்களின் உதவியால் இந்த அம்மைப் பாலைக் குறைந்த விலைக்கு உற்பத்தி செய்து மூன்றாவது உலக நாடுகளுக்கு வழங்க இயலாத நிலையில் உள்ளது. ஒரு காலத்தில் ஒன்று சேர்ந்து கூட்டாக ஆய்வு நிகழ்த்தியது போக இப்போது அவர்கள் எதிராளிகளாகி விட்டனர். இப்போது எல்லாம் இரகசியமாக்கப் பெற்று கழுத்தறுக்கும் போட்டியாகி விட்டது. இஃது எங்கு போய் நிற்குமோ என்பது எனக்குத் தெரியவில்லை - இப்படி ஒர் அமெரிக்க அறிவியலறிஞர் கூறினார். இன்னொரு மலேசிய அறிஞர் இந்தத் தொழில் நுணுக்க வளர்ச்சியுறும் நாடுகளில் பொருளாதார வாய்ப்புகளைத் தரும் என்று சோதிடம் கூறுவது ஒரு கனவே என்கின்றார். மலேரியா அம்மைப் பாலுக்கு நேரிட்ட கதிதான் ஏனைய தொழில் துணுக்க உற்பத்திப் பொருளுக்கும் நேரிடும் என்ற அச்சம் அறிஞர்களிடையே நிலவுகின்றது. உண்மையில் வளரும் பல நாடுகள் உயிரியல் தொழில் துணுக்கங்களில் உண்டாக்கப் பெறும் ஏற்றுமதியில் பெறும் வருமானம் குறைந்து கொண்டு வருகின்றது.