பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 7 போன்றவை பொருள்களும் சேமித்துவைக்கப் பெறுகின்றன. தாவரங்கள் கதிரவன்காலும் ஒளியைக் கொண்டே வாழ்கின்றன என்பதை நாம் அறிவோம். தாவரங்கள் கதிரவனிடமிருந்து ஒளியையும் வெப்பத்தையும் நேரே விழுங்குகின்றன. இந்த உலகில் தாவரங்களைத் தவிர வேறு எந்தப் பொருள்களும் கதிரவனிடமிருந்து நேராக ஆற்றலைப் பெறும் திறன் அடையவில்லை. மனிதர்கள் தாவரங்கள் மூலம் பெறும் கம்பு, கேழ்வரகு, அரிசி, சோளம் முதலிய மாப்பொருள் வகைகளையும் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, எள், கொள்ளு முதலிய பருப்பு வகைகளையும் உட்கொண்டு உயிர் வாழ்கின்றனர். இவை ஒருவகையில் சூரிய மின்கலம் போன்றவை, பறவைகளும் இவற்றை விழுங்கி ஆற்றலைப் பெறுகின்றன. விலங்குகள் செடி, கொடிகள், வைக்கோல், சோளத்தட்டை முதலியவற்றை உட்கொண்டு ஆற்றலைப் பெற்று வாழ்கின்றன. புலி, சிங்கம் முதலிய புலால் உண்ணும் விலங்குகளோ கதிரவனின் ஆற்றலை நேரே விழுங்குவதில்லை; தாவரம் உண்டாக்கும் பொருள்களை விழுங்குவது மில்லை. அவை பயிருண்ணும் விலங்குகளைக் கொன்று தின்று ஆற்றலைப் பெறுகின்றன என்பது வெள்ளிடை மலையென அறிகின்றோம். கதிரவனின் தேங்கிய ஆற்றல் : தாவரங்களின் ஒவ்வோர் அணுவிலும் கதிரவனிடமிருந்து வரும் ஆற்றல் அடங்கிக் கிடக்கின்றது. இந்த ஆற்றல்தான் பூமியிலிருந்து கிடைக்கும் நிலக்கரியிலும், மண்ணெண்ய், டீசல், பெட்ரோல் போன்ற நீர்ம எரியைகளிலும் (Liquid file) அடங்கிக் கிடக்கின்றது. நிலக்கரி என்பது என்ன? பண்டைக் காலத்திலிருந்த காடுகள்தாம் காலப்பேர்க்கில் நிலத்தில் அழுந்தி உருமாறி நிலக்கரியாக மாறியுள்ளன. நீர்ம எரியைகள் யாவும் பழைய மரங்களின் சாறுகளேயாகும். ஆகவே தாவரங்கள் ஒளிச் சேர்க்கையால் கதிரவனிடமிருந்து மரத்தினுள்ளே அன்று புகுந்த ஆற்றல் அங்கேயே உறைந்து கிடக்கின்றது. அவ்வாறு உறைந்து கிடக்கும் ஆற்றல்தான் நம் உடலினுள்ளோ 6. இதுதான் அணுவாற்றல், நீரிய உட்கருக்கள் (Hudrogenrucleus) பரிதிய உட்கருக்களாக (Helium nucleus) மாறுங்கால் உண்டாவது