பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தமிழில் அறிவியல் செல்வம் வெளியிலோ எரிதல் நிகழும்பொழுது உருகி வழிகின்றது; நாம் மீண்டும் வெப்பத்தையும் பெறுகின்றோம்; ஒளியையும் அடைகின்றோம். எரியைகளிடமிருந்து ஆற்றலைக் கொண்டு இயந்திரங்களையும் இயக்குகின்றோம். இந்த நிகழ்ச்சிகளால் கதிரவனே ஆற்றலின் மூலம் என்ற உண்மையும் நமக்குத் தெளிவாகப் புலனாகின்றது. இல்லற வாழ்க்கையில் கணவன் (காதலன்) பல்வேறு வழிகளில் திரவியம் தேடி மனைவியிடம் (காதவி) தருகின்றான். மனைவி சிறந்த முறையில் இல்லாளாக இருந்து இல்லத்து அனைத்துச் செயல்களையும் கவனித்து நடைபெறச் செய்கின்றள். அங்ஙனமே சூரியன் தன்னுடைய ஆற்றலை பூமியிலுள்ள பொருள்களுக்கு - (தாவரங்களுக்கு) வழங்குகின்றான். தாவரங்கள் மூலம் ஏனையவை பெற்று வாழ்கின்றன; இயங்குகின்றன. கதிரவன் வாழ்க்கையின் உயிர் நாடி : கதிரவன்தான் இவ்வுலக வாழ்க்கைக்கு உயிர்நாடியாக அமைகின்றான். இந்த அறிவியல் உண்மையினை அநுபவமாகக் கண்ட இளங்கோ அடிகள், ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரிநாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேருவலந்திரிதலான் என்று தாம் இயற்றிய காவியத்தில் மங்கல வார்த்துப் பாடலாக வெளியிட்டார் கை புனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பில் திளைத்த நக்கீரர் பெருமானும், உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு" என்று தம் திருமுருகாற்றுப்படையைத் தொடங்குகின்றார். இங்ங்னம் அறிவியல் முறையில் இயங்கும் கதிவனை ஆற்றல் மூலமாகத் திகழும் ஆதவனை - எல்லா நலங்களையும் மன்பதைக்கு அளிக்கும் பகலவனை - சூரிய நாராயணன்' என்று மக்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தி மகிழ்கின்றனர்; போற்றுகின்றனர். 7. சிலம்பு மங்கல வாழ்த்து - அடி 4-6. 8. திருமுருகு - அடி 1-2