பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 4; மாறிமாறி அணுகுண்டு சோதனைகளை நடத்தி வருகின்றது. அண்மையில் இந்தியாவும் இந்த விளையாட்டில் பங்கு கொண்டது. இது தீராத பிரச்சினைபோல் வடிவெடுத்து அரசியல்வாதிகளின் பேச்சில் அடிபடுகின்றது. அறிவியல் மேதை ஐன்ஸ்டின் தந்த மத்திரத்தால்" அறிவியலறிஞர்கள் அணுவின் இரகசியத்தை அறிந்தனர். அம்மையப்பர் நிலையில் உள்ள அணுவின் அற்புத அமைப்பைக் கண்டு இறும்பூது அடைகின்றனர். சடமே சக்தி என்று அம்மந்திரம் கூறுகின்றது. பொருண்மையே ஆற்றலாக மாறுகின்றது என்பது ஐன்ஸ்டின் உணர்த்திய உண்மை. இங்ஙனமே ஆற்றலும் பொருண்மையாக மாறும் வித்தையையையும் காண்கின்றோம். ஒரு கிராம் எடையுள்ள நிலக்கரியை அணுச்சிதைவு செய்தால் 2500 டன் நிலக்கரியை எரித்தலால் கிடைக்கும் அளவு வெப்பம் உண்டாகும் என்று கணக்கிட்டுக் கூறலாம். குறளாய் இருந்த வாமனன் வளர்ந்து காட்டிய பேராற்றலை வெளிப்படுத்தியது போல அணுவும் தன் பேராற்றலை வெளிப் படுத்துகின்றது. சிதைக்கப் பெறும் அணு சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்று வெளிப்படும் சுடர்களையொத்த முச்சுடர்களை (ஆல்ஃபா, பீட்டா, காமா கதிர்கள் வீசி நிற்கின்றது. அதனால் பத்துக் கோடி சுழியுள்ள வெப்பதை வெளிப்படுத்துகின்றது. கதிரவனின் மேற்பரப்பிலுள்ள வெப்பம் 6000°C தான். அனுச்சிதைவினால் ஏற்படும் வெப்பமோ ஒளியோ வரையறுக்க முடியாத அளவு பெரியவை. அணுவின் அகட்டில் பொருளனைத்தினையும் உருக்கி ஆவியாக்கவல்ல பெரிய வெப்பம் அடங்கியுள்ளது. ஒளியோ கோடானுகோடி சூரிய ஒளி போன்றது. ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீழ்ந்தபொழுது அந்நகர் சூரியனின் வயிறாக மாறியது, நூறு கோடி சூரியர்கள் திரண்டு ஒருங்கே வந்தாற் போன்று பேரொளி தோன்றியது. இவற்றைத் தவிர நினைக்கவும் முடியாத நெருக்கடி - காற்றின் அமுக்கம் - இறுக்கம் - உலகமே தலையில் விழுவது போன்ற காற்றின் மோதல் ஆகியவை ஒன்று சேர்ந்து மக்களைத் திக்கு 12 E=mc என்பது அம்மந்திரம். இதில் E என்பது ஆற்றல் என்பது பொருண்மை (mass c என்பது ஒளியின் வேகம் இது விநாடிக்கு 3x10 சென்டி மீட்டர் அல்லது 98 கோடி அடி