பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 தமிழில் அறிவியல் செல்வம் முக்காடச் செய்தது. எம்மருங்கும் வீசிய மின்வீச்சால் ஆயிரக் கணக்கான மக்கள் மடிந்தனர். அணுகுண்டு விளைவித்த சேதத்தில் உருத்திரதாண்டவத்தைத் தான் பார்க்கின்றோம்; ஊழிக்காலத்தின் சிவபெருமான் ஆடும் கொடுகொட்டி என்ற திருக்கூத்தைத்தான் காண்கிறோம். அணு விளைவிக்கும் பேரழிவினைக் காணும் நாம் கேட்டாயோ தோழி கிளிசெய்தவாறு ஒருவன் காட்டாதனவெல்லாம் காட்டிக் கேளாதன வெல்லாம் கேட்பித்து" என்ற திருவாசகப் பாடலையும் பாடத் துண்டுகின்றது. கற்பகாலம் எல்லாம் வருந்திச் செய்திட வேண்டிய அழிவினையும் ஆக்கத்தினையும் இமைப் பொழுதிலேயே அணுவாற்றல் செய்து முடித்து விடுகின்றது. அணுகுண்டு என்பதனைக் கேளாதவர் யார்? அணுவினைக் கண்டவர் யார்? கேட்டறியோம் உனைக் கண்டறிவாமை' என்று அணுவினுக்கும் திருப்பள்ளி எழுச்சி பாடலாம். தாயுமிலி தந்தையிலி 冷 தான்தனியன் ஆயிடினும் காவில் உலகனைத்தும் கற்பொடிகாண் சாழலோ" என்ற பாடலாலும் ஜப்பான் நகர்களின் அழிவை கற்பொடியானதை விளக்குவதாகக் கருதலாம். போருக்குச் சாதாரணமாக வேண்டிய வெடிகுண்டு, விமானம் கப்பல் போன்ற பலவற்றையும் ஒதுக்கிவிட்டு அணுகுண்டு பயன்படுத்தப் பெற்றது. அது ஜப்பானிய நகரங்களைக் கண்டு ஒன்றும் தெரியாதபடி சிரித்து, அட்டகாசம் செய்து, பளபள என்று பல்லைக் காட்டி, அந்தப் பேரொளியின் வீச்சிலேயே அழித்து ஒழித்ததைக் கண்டோம். 13. திவா. திருவம் - 6. .ே திருவன. திருப்பள்ளி - 5. 1. மேலது திருச்சழல் - 3, 1945-இல் அணுகுண்டு ஜப்பானிய நகர்களை அழித்த காலத்தில் நான் துறையூரில் பணி புரிந்தேன். அப்போது துறையூருக்கு அருகிலுள்ள சிக்கத்தம்பூர் என்ற ஒரு சிற்றுளில் நடைபெற்ற பெரியார் ஒருவரின் குரு பூசையின் நினைவு விழாவில் தவத்திரு சித்பவாநந்த அடிகள் இப்பாடலைக் கொண்டு அணுகுண்டு விளைவித்த நாசத்தை விளக்கினார். ஜப்பான் நகரங்கள் கற்பொடிகளானதைச் சுட்டி மிக உருக்கமான விளக்கினதை நினைவு கூர்கின்றேன்.