பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தமிழில் அறிவியல் செல்வம் அணு எப்படிப் புலனாகும்; ஆயினும் இன்றைய அறிவியலறிஞர்கள் அணுவின் எடை, அதன் அகலம், நீளம், உயரம், அமைப்பு, இனம், ஆக்கப்பாடு, அழிவாற்றல் முதலிய அனைத்தையும் ஆய்வகத்தில் ஆய்வுக் கருவிகளின் துணைகொண்டு அறுதியிட்டுள்ளனர். அணுவின் நுட்பம் முழுவதையும் அறிந்தால் இயற்கையின் இரகசியம் முழுவதையும் அறிந்து கொள்ள முடியும் இதனை முழுதும் அறிந்தவர் யார்? கற்றது கை மண் அளவுதான் கல்லாதது உலக அளவு உள்ளது. - இன்றுவரையில் மனிதன் அணுவினைப்பற்றி அறிந்துள்ள நுட்பமான கருத்துகளை எண்ணிப் பார்த்தால் அவன் கண்ட உண்மையின் பெருமை, சென்ற வழியின் அருமை, ஆராய்ச்சியின் திறமை ஆகியவை எல்லாம் தெளிவாகும். மகி என்பது எண்வகைச் சித்திகளுள் ஒன்று; அது விருப்பம் போல் ஓர் உருவத்தைப் பகுக்கச் செய்யும் ஒருவகைப் பேராற்றல், அணுவினை அண்டமாக்கும் மகிமா சித்து விளையாடும் ஒரு சித்தரிடம் ஒரு நீரிய அணுவையும் (Hபுள்ogenatom சிறுவன் விளையாடும் ஒரு பந்தினையும் நல்கி கித்துவிளையாடச் செய்வதாகக் கற்பனை செய்து கொள்வோம். ஒருகையில் நீரிய அணுவையும், மற்றொரு கையில் பந்தையும் வைத்துக் கொண்டு சித்து விளையாடுகின்றார். இரண்டையும் விம்மிப் பெருகச் செய்து கொண்டே போகின்றார். என்ன ஆகும்? பந்து இவ்வுலக அளவு பெரியதாக விம்மித் தோன்றுங்கால் அணு சிறுவன் விளையாடும் பந்தளவு உப்பித் தோற்றமளிக்கும். பந்துக்கும் உலகுக்கும் எவ்வளவு வேற்றுமை! 'அணு அவ்வளவு துட்பமானது. ஆனால் அதனைக் கொண்டுதான் அறிவியலறிஞர்கள் பண்டைய சித்தர்கள் போல், பந்தாட்டமும் கோலியாட்டமும் விளையாடுகின்றனர். எல்லா விளையாட்டுகளும் அவர்களது கற்பனையில்தான் நடைபெறுகின்றன். - அணுவின் நுட்பத்தை இன்னோர் எடுத்துக் காட்டாலும் விளக்கலாம். ஓர் அங்குல நீளம், ஒர் அங்குல அகலம், ஒர் அங்குல உயரம் உள்ள ஓர் இடத்தில் அடங்கிக் கிடக்கும் அணுத்திரளைகள் ஆறு இலட்சம் கோடி இதனை எண்ணால் எழுதினால் 6 என்ற எண்ணைத் தொடர்ந்து 19