பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சமயங்களும் இதனையே சாற்றின. பஞ்சபூதங்களைப் பற்றிப் பேசினால் அவையும் அணுக்களே என்று வாதம் செய்யப் பெற்றது. அணுக் கொள்கையை வற்புறுத்திய வைசேடிக மதத் தலைவரான கணாதருக்கு அணுவிழுங்கியார் என்ற மற்றொரு பெயரும் வழங்கியமை ஈண்டுச் சிந்திக்கற்பாலது. மேலை நாட்டிலும் டெமாக்கிரீட்டஸ் என்பாரும் இக்கொள்கையையே முதன்முதலாக எடுத்துப் பேசினார் இவர்தாம் மேலைநாட்டு அணுக் கொள்கையின் தந்தையார். எபிகுயூரிஸம் இக் கொள்கையினரே. லூக்கிரீஷியஸ் என்ற இலத்தின் பாவாணர், அணுக்கொள்கையினையே இயற்கையின் இயல்பு என்று தம்முடைய தத்துவக் காப்பியத்தில் அமைத்துப் பாடியுள்ளார். அறிவியல் தோன்றியதும் அறிவியல் அறிஞர்கள் வேதியியல் நிகழ்ச்சிகளை விளக்குவதற்கு அணுக் கொள்கைளைய் பயன்படுத்தத் தொடங்கினர். அணுக் கொள்கை தத்துவநிலை யிலிருந்து அறிவியல் நிலைக்குத் திரும்பியதும் அது வியத்தகு மாற்றம் அடைந்தது. டால்ட்டன் காலத்தில் 'அணு அழியாதது, பிரியாதது, என்றும் உளதாவது என்ற கொள்கை நிலவியது. நானும் கல்லூரி வாழ்க்கையில் இதைத்தான் படித்து மனப்பாடம் செய்து தேர்வும் எழுதினேன் (1934-35). ஆனால், இன்று அக்கொள்கை பொய்யாய், கனவாய், பழங்கதையாய் மெல்ல மெல்லப் போய்விட்டது. கம்பநாடன் வாழ்ந்த காலத்திலேயே ஆணுவைக் கூறிட முடியும் என்ற கருத்து முகிழ்த்திருந்தது." - . சானிலும் உளன்ஒர் தன்மை அணுவினைச் சதகூறு இட்ட கோனினும் உளன்மா மேருக் குன்றினும் உளன்.இந் நின்ற தூணினும் உளன்.நீ சொன்ன . சொல்லினும் உளன்.இத் தன்மை காணுதி” என்று இரணியனுக்குப் பிரகலாதன் கூறுவதாக அமைந்த பாடலில் இதனைக் காணலாம். 19. இது தவறு. அணுவின் நூறு கூறில் என்பது பிரிவேயன்றி நவீன அறிவியல் கூறும் பிளத்தல் அன்று. 20. கம்பரா. யுத்த இரணியன் வதைப் 124.