பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 19 அணுவின் அமைப்பு : இன்றைய அறிவியலறிஞர்கள் அணுவின் அமைப்பும் அண்டத்தின் அமைப்பும் ஒரே மாதிரியாக இருக்கின்றன என்று ஆய்வுகளால் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர். அண்டத்தில் போலத்தான் பிண்டத்திலும் என்பது நமது நாட்டில் வழங்கிவரும் ஒரு பழமொழி. இந்தப் பழமொழியின் உண்மை அணு ஆராய்ச்சியில் புலனாவதை அறிந்து மகிழலாம். - அண்டங்களின் அமைப்பைப் பற்றி நாம் அறிந்துள்ளதை நினைவூட்டிக் கொண்டால் அனுவின் அமைப்பு தெளிவாகப் புலனாகும். வானவெளியில் எண்ணற்ற அண்டங்கள் ஒரு குறிப்பிட்ட விதிகளின்படி இயங்கி வருகின்றன என்று அறிவியலறிஞ.ாகள் கூறுவர். இதனைத்தான் மணிவாசகப் பெருமானும், அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகளின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன." என்று கூறிப் போந்தார் வானத்திலுள்ள கதிரவன் மண்டலத்தில் நாம் என்ன காண்கின்றோம்? நடுவில் கதிரவன் இருக்க அக்கோளைச் சுற்றிப் பலப்பல மண்டலங்களில் புதன், வெள்ளி, பூமி செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ முதலிய கோள்கள் சுற்றிச் சுற்றி வருக்கின்றன. இந்தச் சதிரவ மண்டலத்தைப் போலத்தான் அனு மண்டலமும் அமைந்துள்ளது. அணுவின் நடுப்பகுதியைச் சுற்றிப் பல வட்டங்களில் வெவ்வேறு நிலைகளில் மின்துகள்கள் இடைவிடாது சுற்றிச் சுற்றி வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டுதான் பாரதியாரும், இடையின்றி அணுக்கலெல்லாம் சுழலுமென இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்’ 2. கம்பரா யுத்த இரணியன் வதைப் 124. 22. பா.க. பாஞ் சப. செய் 206. 笃·3。