பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 21 இந்த அணு மண்டலம் கதிரவ மண்டலத்தைப் போல் அமைந்துள்ள்து என்பதை விளக்குவேன். அணுவின் உட்கருவைச் சூரியன் எனலாம். எலக்ட்ரான்களைப் பூமிக்கு ஒப்பிடலாம். கதிரவனைப் பூமி சுற்றி வருகின்றது. அது போலவே நேர்மின்னூட்டம் பெற்ற உட்கருவை எதிர் மின்னூட்டம் பெற்ற எலக்ட்ரானும் சுற்றி வருகின்றது. உட்கரு எலக்ட்ரானைக் கவர்வதில்லை. முன்னதில் பின்னது ஒடிப் பாய்வதில்லை. இதற்குக் காரணம் என்ன? கதிரவன். புவியைக் கவர்ச்சி விசை (Forcergraயtation என்ற ஆற்றலால் இழுக்கின்றான். ஆனால் பூமி சூரியனால் கவரப் படுவதில்லை. இதற்கு என்ன காரணமோ அதே காரணம்தான் உட்கருவால் எலக்ட்ரான் கவரப் பெறாததற்கும். பூமி சூரியனை இடைவிடாது சுற்றிக் கொண்டிருப்பதால் அந்தச் சுழற்சியின் பயனாக ஒருவித ஆற்றல் சூரியனுக்கு வெளிப்புறமாக வீசப் பெறுகின்றது. நாம் ஒரு கயிற்றின் ஒரு முனையில் சாவி ஒன்றினைக் கட்டி விரலில் கயிற்றின் மற்றொரு முனையினை அமைத்துச் சுற்றும்போது சாவி விரலை இழுப்பது போன்ற ஒருவித ஆற்றலை உணர்கின்றோமன்றோ? அதுபோலவே. இடையன் ஒருவன் ஒரு கன்றுக் குட்டியைக் கயிறு ஒன்றால் கட்டிக் கொண்டிருக்கும்போது கன்றுக் குட்டி இழுத்துக் கொண்டே அவனைச் சுற்றிவரும்போது ஒருவித இழுவிசையை உணர்கின்றான் அல்லவா? இவ்வாறு சுழற்சியால் உண்டாகும் ஆற்றலைப் புறமுக ஆற்றல் (Centrifugal Force) arging வழங்குவர். இதனை மையம் விட்டோடும் விசை என்று வழங்குவதும் உண்டு. இந்த ஆற்றல்தான் சாவியை வெளியில் தள்ளுகின்றது. சாவிவெளியில் சென்று விடாதபடி கயிறு இழுத்து நிற்கின்றது. - அங்ஙனமே கன்றுக்குட்டியும் இடையனை விட்டு வெளியி ஓடாதபடி கயிறு இழுத்து நிற்கின்றது. அதுவோலவே பூமி சூழலும்பொழுது அது புறத்தே எறியப் பெறுகின்றது. கதிரவன் அது வெளியில் சென்று விடாதபடி