பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தமிழில் அறிவியல் செல்வம் இழுக்கின்றான். இந்த இரண்டு வித ஆற்றல்களுக்கும் இடையில் பூமி இருந்த இடத்திலேயே தன் வட்ட வழியை விட்டுப் பிறழ்ந்து போகாமல் சுழன்று வருகின்றது. அங்ங்ணமே அணுவிலுள்ள எலக்ட்ரானும் தன் வட்டத்தில் சுற்றி வருங்கால் புறமுக ஆற்றலால் வெளியே தள்ளப் பெறும்பொழுது உட்கருவின் அகமுகக் கவர்ச்சி அதனை உள்ளுக்கிழுப்பதால் அது சமநிலையில் நின்று தன் வட்டவழியே சுழன்று செல்லுகின்றது. அதனால் அது உட்கருவில் சென்று விழுவதில்லை. அணுவின் உட்கருவைச் சுற்றி ஒடும் எலக்ட்ரான்களைக் கோள்நிலை எலக்ட்ரான்கள் (Planetory electrons) arastrpi augpjáigeari. - அணுவாற்றல் காரணமாகப் பெரிதும் நம் கவனத்தைக் கவர்வது யுரேனியம். அதன் அணு எடை (Atomicயeight) மிக அதிகமானது. ஆவர்த்தன அட்டவணையில் (Periodic table) இயற்கையாகக் கிடைக்கும் அணுக்களில் இதுவே இறுதியில் உள்ளது. யுரேனியத்தை விட அதிக அணு எடையுள்ள தனிமங்களை இன்று செயற்கை முறையில் படைத்துள்ளனர். அவை யுரேனியத்தை அடுத்தபடி தொடர்ந்து அமைகின்றன. யுரேனியம்-235 என்பதன் பொருள் என்ன? யுரேனியத்தின் அணு அமைப்பில் 92 புரோட்டான்களும் 143 நியுட்ரான்களும் கொண்ட உட்கரு உள்ளது. அதனைச் சுற்றி ஏழு வட்டங்களில் (ஒன்றன்பின் ஒன்றாக அமையாமல் பல்வேறு திசைகளில்) அமைந்துள்ளன எலக்ட்ரான்கள். இவை உட்கருவில் உள்ள 92 புரோட்டான்களுக்குச் சமமான எண்ணிக்கையில், அதாவது 92 ஆக அமைந்துள்ளன. இவற்றின் அமைப்பும் ஓர் ஒழுங்கில்தான் உள்ளது. - இதனை ஓர் இருப்பூர்தி வண்டியில் முதல், இரண்டு மூன்றாம் வகுப்புப் பெட்டிகளில் இடவசதிகள் இருப்பதுபோல், உட்கருவைச் சுற்றியுள்ள வட்டங்களில் எலக்ட்ரான்கள் அமைந்துள்ளன. இந்த வட்டங்கள் வெவ்வேறு தூரங்களில் அமைந்துள்ளன. உட்கருவிற்கு அருகிலுள்ள மண்டலத்தில் இரண்டு எலக்ட்ரான்கள்