பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தமிழில் அறிவியல் ാ எலக்ட்ரான்களைத்தான் கொள்ளும். நான்காவது ஐந்தாவது வட்டங்கள் ஒவ்வொன்றும் 18 எலக்ட்ரான்களைக் கொள்ளும், ஆறாவது ஏழாவது ஒவ்வொன்றும் 32 எலக்ட்ரான்களைக் கொள்ளும். இந்த எண் வரிசைகளில் ஒருவித பொருத்தமும் உண்டு. {4 x 1) 2 = 2.1% = 2 {2 x2) 2 = 2.2 = 8 {3x3) 2 = 23 = 8 {4X4}2=2.4°=32 இவற்றில் நாம் காண்பது 1, 2, 3, 4 என்ற நான்கின் மடக்கெண்களை (Squares) இரண்டால் பெருக்கிய தொகையாக இவை வருகின்றன. இந்த வட்டங்களில் முதல் நான்கு வட்டங்கள் முழுதும் நிரம்பியுள்ளன. ஐந்து, ஆறு, ஏழு வட்டங்கள் கனமுள்ள அணுக்கள் வரும் வட்டங்களாகும். இவை முழுதும் நிரம்பியிருப்பதில்லை. இந்த மேல்நிலை வட்டங்களில் வெளிப்புறத்தில் இருக்கும் மண்டலம் இவண் காட்டிய கணக்குப்படி 18 அல்லது 32 எலக்ட்ரான்கள் கொண்டு விளங்கவேண்டும் என்று இருந்தாலும், எந்த வெளிப்புற வட்டத்திலும் 8 எலக்ட்ரான்களுக்கு மேல் இருப்பதில்லை. வேதிஇயல்பு ஒரு பொருளின் வேதிஇயல்பு இந்த வெளிப்புற வட்டத்தினைக் கொண்டுதான் அறுதியிடப் பெறுகின்றது. ஓர் அணுவின் வெளிப்பு வட்டத்திலுள்ள எலக்ட்ரான்கள் மற்றோர் அணுவின் வெளிப்புற வட்டத்திலுள்ள எலக்ட்ரான்களுடன் சேர்ந்து ஒருவட்டம்போல் நிற்பதுதான் வேதியியல்பு என்பது. எடுத்துக்காட்டாக சோடிய அணுவிலுள்ள எலக்ட்ரான்கள் 2 + 3 + 1 என்ற முறையில் மூன்று அடுக்குகளில் அமைந்துள்ளன. குளோரின் அணுவிலுள்ள 17 எலக்ட்ரான்கள் 2 + 8 + 7 என்ற முறையில் அமைந்துள்ளன. சோடிய அணுவின் மூன்றாவது சுற்றில் (புறவட்டத்தில் ஒர்