பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 34 (1) தொடர்நிலை விளைவு ஒரு நகரில் ஒரு வதந்தி பரவுவதை ஒத்துள்ளது. 1958இல்" முதுகுளத்துாரில் (இராமநாதபுர மாவட்டம்) நடைபெற்ற கலவரத்தை நாம் அறிவோம். முதுகுளத்தூர்ப் பகுதிகளில் வகுப்புக் கலவரம் நடைபெறப்போவதாக மதுரை மாநகரில் ஒரு அரசியல்வாதி ஒருவரிடம் கூறுவதாக வைத்துக் கொள்வோம்' அதை அவர் மூவரிடம் கூறுகின்றார். அதை அவர்கள் உடனே ஒன்பது பேர்களிடம் கூறுகின்றனர். இவ்வகையில் வதந்தி பலரிடம் பரவி ஊரே அமர்க்களப்படும் நிலையினைக் கண்டோம். பல்கலைக் கழக பொறியியல் வினாத்தாள் வெளியானபோது இதே நிலைதான். இதைப் போலவே ஒரு நியூட்ரான் தொடங்கும் யுரேனியப் பிளவு எம்மருங்கும் பரவி மாபெரும் விளைவாக மாறுகின்றது. இதே விளைவினால் கட்டுக்கடங்காத ஆற்றல் வெளிப்படுகின்றது. (2) இராமாயணத்தில் மூலபலவதை நிகழ்ச்சியை நாம் அறிவோம். அண்டங்களிலுள்ள அரக்கர்கள் அனைவரும் இலங்கையில் வந்து திரளுகின்றனர். படையின் பெருக்கத்தைக் கண்டு தேவர்களும் அஞ்சுகின்றனர். இராமன் அம்பு மாரிகளைப் பெய்தும் அப்படை குறைவு படாமல் உள்ளது. உடனே காந்தர்வாஸ்திரம் என்னும் படையை ஏவுகின்றான் இராமன். அரக்கர்கள் சோகமடைகின்றனர். எம்மருங்கும் கணக்கில்லாத இராமர்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுகின்றனர். இராமன் ஒருவன்தான் என்ற உணர்ச்சி மறைந்து விடுகின்றது. இங்கேயுளன், இங்குளன் இங்குளன் என்று தம் அருகிலுள்ளவர்களை இராமன் என்று அரக்கர்கள் எண்ணி ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்திக் கொண்டு மடிகின்றனர். மூலபலம் ஒரு நொடிப்பொழுதில் (உண்மையில் 7% மணிநேரத்தில்) அழிந்து படுகின்றது. இராமன் எய்த ஒரு தனி அம்பு மூலபலம் என்னும் 26. அப்போது நான் காரைக்குடியில் பணியாற்றின் காலம் செய்தித்தாள்கள் வழியாக அறிந்தது. 27. இப்பொழுதும் நெல்லை குமரி மாவட்டங்களில் இதே நிலைதான்.