பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 33 விடுகின்றது; அது நிலையான மாற்றநிலையை (Stable configuration) se sou uitbou oor 43it af 4 si (Radiation) நடைபெற்றுக் கொண்டே இருக்கும். r ஐசோடோப்புகளில் இருவகை உண்டு. அவற்றுள் ஒருவகை நிலைத்த தன்மையையுடையவை. இவற்றின் ஒருபகுதி சிதைந்தழிந்து நாளடைவில் நிலைத்த தன்மையை அடைகின்றது. மற்றொரு வகை நிலையற்றவை; இவற்றைக் கதிரியக்கமுள்ள ஐசோடோப்புகள் என்றும் வழங்குவர். கதிரியக்கமுள்ள தனிமங்களைத் தவிர ஏனைய இயற்கைத் தனிமங்கள் பெரும்பாலானவற்றிலும் முதல் வகையைக் காணலாம். இரண்டாம் வகையை இயற்கையில் காண்பது அரிது. அவை யுரேனியம் போன்ற கனமான தனிமங்களிடத்தில் மட்டிலும்தான் காணப்படும் செயற்கை முறையில் ஐசோடோப்புகளைக் கண்டறிந்த பிறகு இவ்வகை ஐசோடோப்புகள் எண்ணிக்கையில் உயர்ந்தன. இன்று வரை 100 தனிமங்களின் 1500 ஐசோடோப்புகளைக் கண்டறிந்துள்ளனர். அவற்றுள் 800-க்கு மேற்பட்டவை கதிரியக்கமுடையவை. இவை செயற்கைக் கதிரியக்க ஐசோடோப்புகள் என்று வழங்கப் பெறுகின்றன. - - பண்புகள் : கதிரியக்கமுள்ள ஐசோடோப்புகளிடம் (1) சிதைந்தழிதல் (2) அரை வாழ்வு என்ற இரண்டு பண்புகள் காணப்பெறுகின்றது. ... ( சிதைந்தழிதல் : சிதைந்தழியுங்கால் துணுக்கு களையும் ஆற்றலையும் வெளியிட்ட வண்ணமுள்ளன. பெரும்பாலும் ஆற்றல் வெப்பமாகவே வெளிப் படுகின்றது. இவ்வெப்பம் கண்ணுக்குப் புலப்படாத ஆல்ஃபா, பீட்டா, காமா கதிர்களாக வெளிவருகின்றன. இவை அபாயகரமானவை: மானிட உடலுக்கு மிகப் பெருங்கேட்டை விளைவிக்கக் கூடியவை. எனவே, இவற்றைக் கையாள்பவர்கள் மிகக் கவனத்துடன் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். (2) அரைவாழ்வு (Half-le : ஒரு குறிப்பிட்ட அளவு கதிரியக்கத் தனிமம் படிப்படியாக நடைபெறும்