பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் - - 35 பாய்ந்ததனால் மாண்டனர். முதலாம் உலகப் பெரும்போரில் பலர் மருத்துவ நிலையங்களில் புதிர்க் கதிர்களில் சிகிச்சை பெற்றபொழுது மரித்தனர். 2 ரேடியத்தைப் பற்றி பலவிநோதமான கதைகளும் பரவ ஆரம்பித்தன. ரேடியம் உடலுக்குக் கிளர்ச்சி யூட்டுகின்றது என்பது போன்ற பல தவறான கருத்துகள் மக்களிடையே பரவின. மக்களும் அவற்றை நம்பத்தான் செய்தனர். எனவே, 1920இல் சிறிதளவு ரேடியம் கரைத்த நீர் அற்புத சர்வ-ரோக சஞ்சீவினி என்று சொல்லி மிக அதிகமான விலைக்கு விற்க பெற்றது. வாங்கவும் பெற்றது. அறியா மக்கள் அதனை வாங்கிப் பருகிப் பரிதாபகரமாக மாண்டனர். அவர்கள் எலும்பு பற்றிய நோய்களால் பீடிக்கப் பெற்று வருந்தினர் என்பது வரலாறு. 3. அணுக்கதிர்கள் விளைவித்த கேடுபற்றிய வரலாறும் உண்டு கடிகாரத்தின் முகம் இரவிலும் தெரிவதற்காக ரேடிய உப்பினைக் கொண்டு மணிகாட்டும் முட்களையும் எண்களையும் பூசி வைப்பதுண்டு. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப் பெறும் உப்பு வர்ணத்தில் மிகச் சிறிய அளவு ரேடியம் இருக்கும். இத்தகைய வர்ணத்தை நியூஜெர்சி (அமெரிக்கா) என்ற நகரில் மயிரினாலான தூரிகைகளைக் கொண்டு எழுதிய பெண்கள் தூரிகைகள் கூறாக இருக்கும் பொருட்டு அவற்றை நாக்கிலுள்ள எச்சிலைத் தொட்டு உதடுகளில் வைத்துச் சுழற்றிக் கூர்மையாகச் செய்தனர். இப்படிச செய்ததனால் மிகமிக நுட்பமான அளவில் ரேடியம் அவர்கள் வாயின் வழியாக உடம்பினுள் சென்றது. ரேடியத்தின் அரை-வாழ்வு 1600 ஆண்டுகள் என்பது நமக்குத் தெரியும். அப்பெண்கள் விழுங்கிய ரேடியம் அளவில் சிறிதாயினும், நெடுகத் தொடர்ந்து எமனாகக் கதிர்களை வீசிக் கொண்டே இருக்கும். இதனால் அப்பெண்களின் உள்ளுறுப்புகள் தின்னப் பெற்று சித்திரவதைக்குள்ளாகி இறுதியில் மரித்தனர். அவர்கள் விழுங்கிய சிறுஅளவு ரேடியம் அவர்கள் எலும்பிலும் சேர்ந்து 莺族” இவ்வாறு உயிழிந்த மங்கையர் நூற்றுக்கு 氢-孕。 - -