பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தமிழில் அறிவியல் செல்வம் மேற்பட்டோர். இறந்த பெண்களின் எலும்புகள் ஆராய்சிக்காகச் சோதனைச் சாலைகளில் வைக்கப் பெற்றுள்ளன. இந்த எலும்புகள் அருகில் இன்றும் கைகர் எண் கருவிகளைக் கொண்டு சென்றால் கிலிக் ஒலி கேட்கின்றது. ரேடியத்தைப் பற்றி முழு உண்மையை அறியாது அதனை மருத்துவ முறையில் பயன்படுத்தியபொழுது இத்தகைய கேடுகளே விளைந்தன. - வழி - துலக்கி முறை : உயிருள்ள பொருள்களின் ஆராய்ச்சியில் பயன்படுவது இம்முறை. இம்முறையினால் உயிர்ப் பிராணிகள் சாதாரணமாகப் பயன்படுத்தும் தனிமங்களின் கதிரியக்க வடிவங்களைக் கொண்டு இழைங்களைத் துளைத்துச் சென்றும், மிகச் சிக்கலான வேதியியல் மாற்றங்களை ஊடுருவிச் சென்றும் பார்க்க முடிகின்றது. கைகர் எண் கருவிகளைக் கொண்டும் கதிர்களால் பாதிக்கப் பெறும் ஒளிப்பட பிலிமைக் கொண்டும் கதிரியக்கத்தின் இருப்பிடத்தை அறிய முடியும். உடலிலுள்ள வேதியியற் பொருள்களின் செயலைக் கண்ணுறுவதற்கு மேற்கொள்ளப் பெறும் பல்வேறு ஆய்வுகளிலும் இந்த ஒரே கருவிதான் பயன்படுத்தப் பெற்று வருகின்றது. இந்த வழி துலக்கி ஆராய்ச்சி, ஆராய்ச்சி உலகில் புதிய திருப்பத்தை உண்டாக்கியுள்ளது. - நமது உடலில் பலவேதியியல் விளைவுகள் நிகழ்கின்றன. மிகச் சிறிய அளவிலுள்ள பல தனிமங்கள் பல முக்கிய விளைவுகளில் பங்கு கொள்ளுகின்றன. எடுத்துக்காட்டாகக் கரியைக் கூறலாம். நமது உடலில் கரி பல வேதியியற் கிரியைகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. உயிரணுக்களில் கரி இன்றியமையாதபொருளாகவுள்ளது. நமது உணவிலும், உடலிலிருந்து அதற்றப்பெறும் கழிவு பொருள்களிலும் கரி உள்ளது. ஆகவே கரியைக் கதிரியக்கமுடையதாகச் செய்து அதனை உடலில் செலுத்திப் பல உண்மைகளை அறியலாம். இன்சுலின் நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்துகின்றது என்பதை நாம் அறிவோம். இந்நோயை இடக்கர் அடக்கலாக சருக்கரை நோய் என்று வழங்குகின்றனர். - .2ی . . . . . . . . . م" : "