பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 37 ஒருவர் உடலில் இன்சுலின் குறைவாகச் சுரந்தால் அவர் உடன் சருக்கரையைச் சரியாகப் பயன்படுத்த முடியாது. அமெரிக்காவில் ஒரு மருத்துவ நிலையத்தில் கதிரியக்கமுள்ள கரியமலவாயு மண்டலத்தில் மொச்சைச் செடியை வளர்த்துக் கதிரியக்கமுள்ள சருக்கரையைத் தயாரித்தனர். இந்தச் சருக்கரையை இன்சுலினுடன் சேர்த்து அவற்றை நீரிழிவு நோயால் பீடிக்கப் பெற்றிருக்கும் எலிகளின் உடலில் செலுத்தி பல உண்மைகளைக் கண்டறிந்தனர். இன்சுலின் கிளைக்கோஜன் உற்பத்தித் திறனைப் பெருக்குகின்றது என்றும், சருக்கரையை எரிப்பதற்கும் அது பயன்படுகின்றது என்பதையும் அறிந்தனர். இன்று அறிவியல் ஆராய்ச்சியில் வழங்கும் பல முக்கிய முறைகளில் வழி - துலக்கி முறையும் ஒன்றாக - மிகச்சிறப்பாகத் திகழ்கின்றது. 2. மருத்துவத் துறையில் : உயிரியல் துறையிலும் மருத்துவத் துறையிலும் அணுவாற்றலைக் கையாளுங்கால் மிகவும் விழிப்பாக இருத்தல் வேண்டும். இந்த இரண்டு. துறைகளிலும் பெருநன்மைகள் ஏற்பட வாய்ப்புகளும் உண்டு உயிருக்கே ஊறுவிளைவிக்கக் கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்படலாம். (1) புற்றுநோய் : புற்று நோய் சிகிச்சையில் கதிரியக்க சோடியம் கோபால்ட் - 60, செசியம் - 137 போன்ற பொருள்கள் பயன்படுகின்றன. - கதிரியக்க சோடியத்தைப் புற்று நோய் உள்ள இடத்தில் வைத்து விட்டால் அது விரைவாக-பீட்டா கதிர்களை வெளியிட்டுப் புற்றை அழிக்கின்றது. புற்றை விளைவிக்கும். கிருமிகள் மடிந்து விடுகின்றன. கதிரியக்கச் சோடியத்தின் அரை வாழ்வு பதினைந்து மணிநேரம் இது விரைவில் கதிரியக்க இயல்பை இழந்து விடுவதால், உடலுக்குப் பின்விளைவுகள் ஏற்படுவதில்லை. ஆனால் இந்தச் செயற்கைக் பொருள் சம எடையுள்ள ரேடியத்தைவிட பத்து இலட்சமடங்கு அதிகக் கிளர்ச்சியுள்ளது என்று கணக்கிடப் பெற்றுள்ளது. அன்றியும், சோடியத்திலிருந்து தோன்றும்