பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தமிழில் அறிவியல் செல்வம் மக்னீசியம் என்ற தனிமமும் உடலில் எளிதில் கலந்துவிடும். மக்னீசிய உப்பு உடலுக்குக் கேடுவிளைவிப்பதில்லை. எனவே சிகிச்சை முடிந்தபிறகு இதனை உடலினிற்றும் வெளியே அகற்றத் தேவை இல்லை. கோபால்ட் - 60ஐ இச்சிகிச்சையில் பயன்படுத்தும் முறையை 1951இல் கனடா நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தனர். இதை அவர்கள் முதலில் கோபால்ட்டு குண்டு (Cobotbomb) என்று வழங்கினர். இதனை மிகப்பாதுகாப்பான முறையில் கையாண்டனர்; வெற்றியும் கண்டனர். செசியம் - 137 காமா கதிர்களை வெளியிடும் பக்குவிடும் பொருள் நீண்ட அரை-வாழ்வைக் கொண்டது. இதுவும் புற்று நோய்ச் சிகிச்சையில் பயன்படுகின்றது. . கதிரியப் பொன்னும் (Radio gold) புற்று நோய்ச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப் பெறுகின்றது. உடலின் குழிகளிலுள்ள புற்று நோய் இழையங்கள் அடிக்கடி அதிகமான பாய்மங்களை (Fluids) உற்பத்தி செய்கின்றன. இந்தக் குழிகளில் கதிரியக்கப் பொன்னைக் குத்தில் புகுத்தி விட்டால் அது புற்று நோய் அணுக்கள் வளராதிருக்கத் தடைசெய்கின்றது. குழிகளின் அணைச் சவ்விலுள்ள உயிரணுக்களின் சுரக்கும் செயலையும் குறைத்து விடுகின்றது. உடலில் மிக ஆழத்தில் வளரும் கழலையைக் குணப்படுத்தக் கதிரியக்கப் பொன் பயன்படுத்தப் பெறுகின்றது. (2) தொண்டைக் கழலை நோய் ! நமது உடலில் பல்வேறு பகுதிகளில் தூம்பிலாச் சுரப்பிகள் (Ductiessglands) உள்ளன. இவற்றில் ஊறும் ஹார்மோன்கள் என்னும் வேதியியற் சாறுகள் நமது உடலில் நிகழும் பலவித உயிரியல் விளைவுகளைக் கட்டுப் படுத்துகின்றன. நமது கண்டத்திலுள்ள சுரப்பியின் பெயர் தைராய்டு (Thyroid) என்பது இதனைப் புரிசைச் சுரப்பி என்று வழங்குவர். இது செயற்படுவதில் கோளாறுகள் நிகழ்ந்தால் உடல் நலம்