பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இய்ற்பியல் நோக்கில் - 4? அழுகின் உறுப்பின் அருகே கைகர் எண் கருவியை’ கொண்டு சோதித்தால் எந்த இடத்துடன் குருதியோட்டம் தடைப்பட்டு நின்று விடுகின்றது என்று துல்லியமாக அறுதியிட்டுவிட முடியும். உடனே அந்த இடத்தை வெட்டி எரியலாம். 5. சொத்தைப் பல் : பல்லில் சொத்தைவிழுதல் உணவாலும், பாக்டீரியா என்ற கிருமிகளாலும் நெருக்கமாகப் பல் அமைந்திருப்பதாலும், பற்களைச் சரியாகத் துலக்காத தூலும், தும்பிலாச் சுரப்பிகளில் நேரிடும் கோளாறுகளாலும், குடிவழிப்பண்பாலும் நேரிடுகின்றது என்று பல காரணங்கள் கூறப் பெறுகின்றன. நல்ல பற்களின் வளர்ச்சிக்குக் கால்சியமும் பாஸ்வரமும் மிகவும் இன்றியமையாத பொருள்கள். சொத்தைப் பற்களைக் குணப்படுத்துவதற்குமுன் பல் மருத்துவர்கள் பற்களில் பாஸ்வரம் எந்த அளவில் படிந்து வருகின்றது என்பதையும், அது படிவதில் எந்தெந்த நிகழ்ச்சிகள் பாதிக்கப்படுகின்றன என்பதையும் அறிதல் வேண்டும். கதிரியக்க ஐசோடோப்புகள் வந்த பிறகு இதை அறிவது மிக எளிதாக அமைந்து விட்டது. கதிரியக்கக் கிளர்ச்சி உள்ளனவும் உடலுக்குத் தீங்கு பயக்காதனவும் ஆன பொருள்களை நோயாளியின் உணவுடன் கலந்து கொடுத்தால் போதுமானது. கதிரியக்கமுள்ள பாஸ்வரம் அங்குள்ள நிலையினை உளவு காட்டிவிடும். இவற்றுடன் நிறுத்தி அடுத்தபகுதிக்குப் போகலாம். - - (3) உழவுத் தொழிலில் : கதிரியக்க ஐசோடோப்புகள் உழவுத் தொழில் துறையில் எந்தெந்த முறையில் பயன்படுத்துப் பெறுகின்றன என்பதைக் காண்போம். - 28. கதிரியக்கமுள்ள பொருள்கள் வீசும் எலக்ட்ரான்கள், ஆல்ஃபா துணுக்குகள் போன்ற மின்னூட்டம் பெற்ற துணுக்குகளை ஒவ்வொன்றாக எண்ணிக் கணக்கிடுவதற்கு அமைக்கப் பெற்ற கருவி இது இதனை இயற்றியவர்கள் செருமானிய நாட்டு கைகள், முல்லர் என்ற அறிவியலறிஞர்கள். இவர்களின் பெயர் கொண்டே இக்கருவி கைகர் - முல்லர் எண் கருவி என்று வழங்கப் பெறுகின்றது.