பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 . தமிழில் அறிவியல் செல்வம் (1) உரமிடுதல் ஆராய்ச்சி : அண்மைக் காலம் வரையிலும் தாவரங்களின் வளர்ச்சி, பருமன் அவைத்தரும் பலன் ஆகியவற்றைக் கொண்டே உரமிடுதலின் விளைவுகளை ம க்க ள் தீ ர் மா னி த் து வ ந் த ன ர் . க தி ரி ய க் க ஐசோடோப்புகளைக் கண்டறிந்த பிறகு இந்நிலை மாறி விட்டது. இவற்றைக் கொண்டு பொருள் பொதிந்த புள்ளி விவரங்கள் முதன்முதலாகக் கண்டறியப் பெற்றன. சில எடுத்துக்காட்டுகள் : - (அ) முதிர்ந்த தாவரங்களிலுள்ள பாஸ்வரச் சத்து மண்ணில் படிந்து கிடக்கும் பாஸ்வர உப்பிலிருந்து வந்ததா? அன்றி உழவர்கள் இடும் செயற்கை உரத்திலிருந்து வந்ததா? என்பவை அறுதியிடப் பெற்றன. கதிரியக்கச் சத்துப் பொருள்கள் (nutrients) தாவரங்களுக்கு மண்ணின் மூலமும் அங்கிருந்து வேர்களுக்கும் அவற்றிலிருந்து தாவரங்களுக்கும் எந்த அளவில் செல்லுகின்றன? எவ்வளவு வேகத்தில் செல்லுகின்றன? என்பவற்றை வலி -'துலக்கி அறியப் பயன்பெறுகின்றன. இன்றும் இந்த ஐசோடோப்புகள் அறிவியலறிஞர்கட்குத் தாவரங்களின் வளர்ச்சிப் பருவங்களில் எப்பருவங்களில் உரம் அதிகமாகத் தேவைப்படுகின்றது? என்று தீர்மானிக்கவும் தாவரங்களுக்கு முழு நன்மை பயக்க வேண்டுமானால் உரத்தை எங்கு, எவ்வாறு இடவேண்டும் என்றும், நாட்டின் பல்வேறுபட்ட மண்ணின் இயல்பிற் கேற்றவாறு எந்த வகை உரங்கள் சிறந்த தன்மை பயக்கின்றன என்பதை நிலைநிறுத்தவும் இன்னும் உரமிடுதலில் இன்னோரன்ன நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்மானிக்கவும் துணைசெய்கின்றன. - (ஆ) மக்காச் சோளம், புகையிலை, பருத்தி ஆகிய பயிர்கள் இளஞ் செடிகளாக வளரத் தொடங்கும் பொழுது மட்டிலுமே பாஸ்ஃபேட் உரத்தை ஏற்கின்றன என்று சோதனை காட்டிற்று. இதனால் இப்பயிர்கட்கு தொடர்ந்து உரமிடுதல் வீண் என்பதை உணர்ந்தனர். இதனால் உரத்தினால் ஏற்பட்ட செலவுகள் குறைந்தன. .