பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தமிழில் அறிவியல் செல்வம் நிலத்திலுள்ள துண்ணிய உயிர்கள் வாயு நிலையிலுள்ள நைட்ரொஜனை நிலைத்த நைட்ரொஜனாக மாற்றுகின்றது என்பது நீண்ட காலமாக அறிந்த செய்தி அவரை, மொச்சை, பட்டாணிச் செடிகள் போன்ற லெகியூம் குடும்பத்தைச் சார்ந்த தாவரங்கள் வேர்களின் முண்டுகளிலுள்ள (Modules) பாக்டீரியா புலத்திலுள்ள நைட்ரேட் உப்புகளை எதிர்காலத்தில் பயிராகக் கூடிய தாவரங்களுக்கு ஊட்டம்தரும் நிமித்தம் உண்டாக்குகின்றன. லெகியூம் குடும்பத்தைச் சார்ந்த பிறதாவரங்களுக்கு எடுத்துக்காட்டாக கோதுமைக்கு இந்த நைட்ரோஜனை எவ்வாறு அதிகம் கிடைக்கச் செய்வது என்று ஆராய்கின்றனர். கதிரியக்கமுள்ள ஐசோடோப்புகள் இதில் பெரும்பங்கு பெறுகின்றன. பயனுள்ள முடிவுகளையும் கண்டு விட்டனர். (3) ஒளிச் சேர்க்கை ஆய்வில் : ஒளிச்சேர்க்கை இன்றேல் தாவர உலகம் இல்லை. மனிதன் உட்படப் பிராணி யுலகமும் இல்லை. சுருங்கக் கூறின் ஒளிச்சேர்க்கை நடைபெறாவிடில் இவ்வுலகம், அம்புலி உலகம் போல், வெறும் பாழிடமாகத்தான் இருக்கும். உயிர் வாழ்க்கையே நடைபெறாது. ஒளிச்சேர்க்கையின் இரகசியம் மனிதனுக்கு நன்கு புரிந்து விட்டால், அதனை அபிவிருத்தி செய்ய இயலும் இவ்வுலகில் நாடோறும் பல்கிப் பெருகிவரும் மக்கட் தொகைக்கேற்ப இயற்கையில் உண்டாகும் உணவு உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ள இயலும், அதிகம் முடியாவிட்டலும் ஒளிச்சேர்க்கையில் நடைபெறும் எதிர் வினையை Reaction) இரட்டிப்பாக்கி கதிரவன் ஒளியிலிருந்து பச்சிலைகள் தடையின்றி உணவினை உற்பத்தி செய்ய இயலும், - . பச்சிலைகள் வெய்யோனிடமிருந்து பெறும் ஆற்றலைப் பயன்டுத்துகின்றன. ஆனால், அவை மிகத் திறமையாகப் பயன்படுத்துவதில்லை. நெல் வயல்களிலும் புல்வெளிகளிலும் காலும் கதிரவனின் ஆற்றலில் ஒரு சதவிதத்திற்குக்