பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தமிழில் அறிவியல் செல்வம் (ஆ) உயர்வகைத் தாவரங்கள் : கதிரியக்கக் கிளர்ச்சியைப் பயன்படுத்தி வியத்தகு ஆராய்ச்சிகள் செய்யப் பெற்றுள்ளன. சிலவகைக் கதிர்களால் உயிரினங்களில் சில வகை மாறுபாடுகள் ஏற்படுகின்றன என்றும், அவை குடிவழியாக இறங்கக் கூடியவை என்றும் அறிவியலறிஞர்கள் நீண்ட நாட்களாகவே அறிந்திருந்தனர். இம்மாறுபாடுகளைச் சடுதி மாற்றம் (Mutation) என்பர். ஒட்ஸ் என்ற ஒருவகைத் தானியத்தில் நியூட்ரானைச் செலுத்திப் பயிர் செய்து துரு நோய் (Rust) என்ற ஒருவகைத் தாவரநோயினால் பாதிக்கப் பெறாத புதுவகை ஒட்சைப் படைத்துள்ளனர். இவவகைத் தானியத்தை உண்டாக்க ஒன்றரை ஆண்டுகள் ஆயின. பழைய பயிரிடு முறைகளைக் கையாண்டு இத்தகைய விதையை உண்டாக்க முயன்றிருந்தால் குறைந்தது பத்து ஆண்டுகள் காலமும் அதிக செலவும் ஆயிருக்கும். (இ) இன்று தயாராகும் பென்சிலின் என்ற மருந்தில் பெரும்பகுதி ஒரு சிறந்த வகைக் காளானிலிருந்து உண்டாக்கப் பெறுகின்றது. இக்காளான் வகை அணுக்கதிர்களால் சடுதி மாற்றம் அடைந்த ஒருவகை உயிராகும். இந்த முறையில் புதிய சிறந்த வகைத் தாவரங்களைப் படைக்கக் கூடும் என நம்ப இடம் உண்டு. (4) தாவர நோய்கள் பற்றிய ஆய்வில் : பல்லாண்டுகளாகத் தாவரங்களுக்கு ஏற்படும் நோய்கள்பற்றியும், பைங்கூழ் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் களைகள்பற்றியும், தாவரங்களுக்கும் பூச்சிகளால் நேரிடும் அழிவு பற்றியும் ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆய்வில் கதிரியக்க ஐசோடோப்புகள் பெரிதும் பயன்படுகின்றன. (அ) பொடிகள், திரவங்கள் வடிவிலுள்ள ஒருசில பூச்சிக் கொல்லிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி உழவர்கட்கு ஏற்படும் நட்டத்தைக் குறைக்கலாம். எனினும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சதா ஏதாவது அபிவிருத்தித் திட்டம் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. சில நோய்களையும் பூச்சிகளையும் நச்சு மருந்துகள் ஒன்றும்