பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 51 பெற்றிருக்கும்; அஃதாவது இரண்டும் அளக்கப் பெறும் பொருள் இருக்கும். அதேபக்கத்திலேயே உள்ளனவாக இருக்கும். இதில் மீளும் கதிர்வீச்சின் (Reflected radiation) தீவிரமே அளக்கப்பெறுகின்றது. கதிர்வீச்சு மூலம் நன்றாக மூடப்பெற்று தகட்டை மோதும் கதிர்வீச்சு மட்டிலும் பிரதிபலிக்கும்ாறு (மீளுமாறு அமைக்கப் பெற்றுள்ளது. இவ்வாறு மீளும் கதிர்வீச்சுதான் அயனி அறையால் ஏற்றுக் கொள்ளப் பெறுகின்றது. பெரும்பாலும் இவ்வகைக் கருவி ஒரு தகட்டின் மீது பூச்சாகப் போடப் பெற்றுள்ள பொருளின் கனத்தை அளவிடுவதற்குப் பயன்படுகின்றது. இக்கருவிகளைக் கொணடு கனத்தை அளவிடுவதில் பல நன்மைகள் உண்டு. ( அளவு மிகச் சரியாக இருககும் (ii) அளவையை எளிதாகவும் அளந்து கொள்ளலாம் (iii) கருவிக்கும் அளவிடப் பெறும் பொருளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. - (ii) வேறு அளவு கருவிகள் : கனத்தை அளக்கும். கருவிகளைப் போலவே வேறு அளவு கருவிகளும் கதிர்க் கற்றையின் தீவிர மாற்றங்களையே அளவுகளாகக் கொண்டுள்ளன. எ.டு. (1) கதிரியக்கக் கோபால்ட்டிலிருந்து வெளிவரும் காமா கதிர் வீச்சினைக் கொண்டு ஒர் உலையிலுள்ள உருகிய உலோகத்தின் உயரத்தையோ கன பரிமாணத்தையோ அளக்கலாம். மலைச் சிகரங்களில் குவிந்திருக்கும் பனிக்கட்டியிலுள்ள நீரின் அளவையும் அளந்து கான முடியும் கதிரியக்க மூலத்தை ஒருபுறமும் அளக்கும் கருவியை மற்றொரு புறமும் வைத்து இஃது அளவிடப் பெறகின்றது. எ.டு. (2).சில உற்பத்தித் தொழிற்சாலைகளில் பொருள்களைப் பொட்டலங்களிலும் டப்பாக்களிலும் அடைக்கும் செயலில் கதிரியக் ஐசோடோப்புகள் பயன்படுகின்றன. பொருள் நிரம்பிய பொட்டலங்கள் அல்லது டப்பாக்கள்.இயந்திர விசையால் நிரப்பப் பெற்று 致・ラ。 - -