பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தமிழில் அறிவியல் செல்வம் ஒன்றன்பின் ஒன்றாகச் சென்று கொண்டே இருக்கும். ஒரு பொட்டலத்தில் சரியானபடி பொருள் நிரம்பாதிருந்தால் அதன் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திலுள்ள அதிகக் கதிர்கள் செல்லும். உடனே ஒர் எச்சரிக்கை ஒளி ஒளிரும்: அல்லது சில இயந்திரப் பகுதிகள் இயங்க குறைபாடுள்ள பொட்டலத்தைக் கீழே தள்ளி விடும். B. அடையாளமிடுதல் (Marking) அடையாள மிடுவதற்கும் கதிரியக்க ஐசோடோப்பைப் பயன்படுத்துகின்றனர். இங்கெல்லாம் இவை வழி துலக்கிகளாகத் தான் பயன்படுத்தப் பெறுகின்றன. இவை தம் இருப்பை அறிவதற்கும், ஒரு குறிப்பிட்டப் பொருள் நகர்வதை அறிவதற்கும் அல்லது ஒரு திட்டமான பொருள் செல்லுவதைக் காண்பதற்கும் பயன்படுகின்றன. எ.டு. ( பெட்ரோலியக் கம்பெனிகளில் : பெட்ரோலியத் தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கான மைல் நீளமுள்ள குழல்கள் பல்வேறு எண்ணெய்ப் பொருள்களைக் க்டத்துவதற்குப் பயன்படுகின்றன. அக்குழல்கள் வழியாகப் பலபொருள்கள் தொடர்ந்து செலுத்தப் பெறுகின்றன. அங்ங்னம் செல்லுங்கால் ஒன்றனுடன் பிறிதொன்று கலக்காதிருக்கும் பொருட்டு அவை குழலினுள் செல்லுங்கால் ஒன்று எவ்விடத்தில் முடிந்து பிறிதொன்று எங்குத் தொடங்குகின்றது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகின்றது. இதற்கு என்ன செய்வது? . ஒரு குறிப்பிட்ட குழல் வழியில் மிகச்சிறிய எண்ணெயில் கன்ரயும் கதிரியக்க ஐசோடோப்பை இரண்டு எண்ணெயில் சேரும் இடத்தில் போட்டுவிடுவர். அந்த எண்ணெய்களை எடுக்கும் இடங்களில் கைகர்-எண் கருவியைக் கொண்டு கதிரியத் திரவத்தைக் கண்டறிந்து விடலாம். இச்செயல் uાન விரைவாகவும் நடைபெறுகின்றது. இம்முறை கண்டறியப் பீெற்றபிறகு ஒரே குழல் வரியாக பண்ப்டா பெட்ரோலியம்