பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தமிழில் அறிவியல் செல்வம் வெவ்வேறு சோப்பினால் கழுவுதல் வேண்டும். கழுவிய பிறகு துணியில் எஞ்சி நிற்கும் பாக்டீரியாக்களை அளந்த்ால் சோப்பின் கழுவு திறனை அறியலாம். எ.டு. (6) பிறபலன்களும் கதிரியக்கக் கிளர்ச்சியுள்ள ஐசோடோப்புகளால் பெற முடிகின்றன. *> () ஒர் ஆற்றுப் படுகையிலிருந்து @i'n $3560673 (Oysters) சேகரிக்கும் செம்படவர்கள் சிப்பிகளைக் கெடுக்கும் வேதியியற் பொருள் அந்நீரில் உள்ளதா என்பதை அறியார் அண்மையிலுள்ள ஒரு தொழிலகத்திலிருந்து அந்த ஆற்று நீரில் கலக்கப்பெறும் வேதியியற் கழிவுகளுடன் மிகச்சிறிய அளவு கதிரியக்கப் பொருள்க்ளைச் சேர்த்து விட்டால் அவை அந்த வேதியியற் பொருள்களைக் காட்டிவிடும். (ii) கொலை, களவு போன்ற குற்றங்களைக் கண்டறிவதிலும் கதிரியக்க ஐசோடோப்புகள் துணைபுரியத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவில் ஊர்க் காவல்துறை இவற்றைப் பயன்படுத்துகின்றது. - ( சில வைர வணிகர்கள் விலையுயர்ந்த கற்களுடன் கதிரியக்க ஐசோடோப்புகளை இணைத்து வைக்கின்றனர். அவை களவு போனால் இந்த ஐசோடோப்புகள் மூலம் அவற்றைக் கண்டு பிடிப்பது எளிதாகின்றது. (i) பொறிகளை இயக்குபவர்கட்கு அடிக்கடி நேரிடும் விபத்துகளைப் பாதுகாக்கும் அமைப்பிலும் கதிரியக்க ஐசோடோப்பு பயன்படுகின்றது. பொறியினை இயக்குவோர் சிறிது கதிரியக்கமுள்ள கங்கணம் போன்ற ஒருபட்டியைத் தம் கையில் கட்டிக் கொள்வர். பொறியில் கதிர்வீச்சினைக் கண்டறிய கைகர் எண் கருவி போன்ற அமைப்பொன்று பொருத்தப் பெற்றிருக்கும். கை விபத்துக்குள்ளாகும். எல்லைக்கு வருங்கால் கையில் அணிந்திருக்கும் பட்டியிலுள்ள கதிர்வீச்சு பொறியில் அமைக்கப் பெற்று இருக்கும் கருவியில் தெரியும். இந்நிலையில் பொறியை நிறுத்திவிடக் கூடிய யுக்தி சாதனத்தை அமைத்துப்