பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 57 தொக்கன அண்டங்கள் - உளர் தொகைபல கோடிபல் கோடிகளாம். என்று கூறி வியப்பார். இந்த எல்லையற்ற விண்வெளியில் நமது கதிரவன் ஒரு சாதாரண விண்மீனாகும். அது பல உலகங்கள் அடங்கிய மாபெருங் குடும்பமாகும் அக்குடும்பம் ஞாயிற்றுக் குடும்பம் (Solar Sustem) என்று வழங்கப் பெறுகின்றது. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா உலகுகளும் பிரித்தற்கியலாத நிலையில் பிணைக்கப் பெற்றுள்ளன. 3۔ சூரியனே மிகப் பெரியவனாக உள்ளவன். இவனே குடும்பத் தலைவன். இந்த உலகுகள் யாவும் இவனைச் சுற்றி பல்வேறு திசைகளில் பல்வேறு நீள்வட்டங்களில் சுற்றியோடுகின்றன; ஒரு கணக்கில் ஒடுகின்றன. இவற்றை வான நூலார் கோள்கள் (Planets) என வழங்குகின்றனர். நமது பூமியையும் சேர்த்து ஒன்பது கோள்கள் இக்குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றுள் சூரியனும் சந்திரனும் மட்டிலுமே பூமியில் வாழும் நமது ஊனக்கண்ணுக்குப் புலனாகின்றன; பெரியவையாகவும் தோன்றுகின்றன. 32 கதிரவனைச் சுற்றிக் கோள்கள் வட்டமிட்டுஒடுவன போலவே, ஒவ்வொரு கோள்களையும் பல சிறிய கோள்கள் (Satellites) சுற்றி ஒடிய வண்ணம் உள்ளன. அவற்றின் விவரம் கோள்கள் சிறிய கோள்கள் சூரியன். () புதன் {} வெள்ளி 0 பூமி 1 செவ்வாய் 2 32. பா.க. கோமதியின் மகிமை 5.