பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் அறிவியல் செல்வம் 59 இவற்றைத் தவிர வால் மீன்கள் (Cornels) என்ற ஒரு பெருங்கூட்டமும் பகலவனை வலம் வருகின்றன. இவை நியதியற்ற நீள்வட்டத்தில் (Ellipse) இயங்குகின்றன. ஆகவே, இவை அகிலத்தில் நாடோடிக் கூட்டங்கள் என்று வழங்கப் பெறுகின்றன. r இறுதியாக எண்ணற்ற போர்க் கப்பற் கூட்டம் (Aாeda) போல் விண்கற்கள் (Meteors) எல்லாப் பக்கங்களினின்றும் ஞாயிற்றுக் குடும்பத்தில் நுழைந்த வண்ணம் உள்ளன. இவை தவிர அறிவியலார் அடிக்கடி செயற்கை கோள்களை அனுப்புகின்றனர். இவையும் கதிரவனைச் சுற்றி வலம் வந்து கொண்டுள்ளன. இன்னும் பல்லாண்டுகள் கழித்து ஞாயிற்றுக் குடும்பத்தை நோக்குவோமாயின் இந்தச் செயற்கைத் துணைக் கோள்களையும் காண்போம். கம்பன் புதல்வர்களால் பொலிந்தான் உந்தை' என்று இராமன் வாய்மொழியாகக் கூறுவதுபோல், பகலவனும் பலமக்கட் செல்வங்களை அடையப் போகின்றான். சூரிய வமிசத்தைச் சேர்ந்த தசரதனுக்கு இந்தவிதமான 'புத்திரப் பேறு கிட்டும்போது, அந்த வமிசத்தின் தலைவனான சூரியனுக்கும் இப்பேறு கிட்டுவதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம் அல்லவா? (2) காற்று மண்டலம் : நமது பூமி விண்வெளியில் தம்முடைய மிகப் பெரிய எடையுடன் மிதந்து கொண்டுள்ளது. இப்பூமியைக் காற்று மண்டலம் ஒரு போர்வைபோல் போத்திய வண்ணம் சூழ்ந்து கொண்டுள்ளது. புவியீர்ப்பு விசை காற்று மண்டலத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டுள்ளது. இவ்விசை இல்லையாயின் காற்று மண்டலம் விண்வெளியில் கரைந்துவிடும். சந்திரனின் ஈர்ப்பு விசை காற்றுமண்டலத்தை ஈர்ப்பதற்குப் போதாததால் அங்குக் காற்று மண்டலமே இல்லை. 33. கம்பரா. யுத்த வீடணன் அடைக்கலம் - 146.