பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Quiptíluso GE"##959 63 (3) பயணத்திற்கேற்ற ஊர்தி : விண்வெளிப் பயணத்திற்குப் பயன்படும் விமானம் இராக்கெட்டு. இதற்கெனச் சிறப்பாகத் தயாரிக்கப் பெற்றது. இது பூமியைச் சூழ்ந்துள்ள காற்று மண்டலத்தைஊடுருவிச் சென்று காற்றே இல்லாத பரந்த விண்வெளியில் பயணம் செய்யக் கூடியதாக அமைந்திருக்கும்.' இந்த விமானம் அமைப்பதற்கு ஏராளமான பணம் வேண்டும். அணுகுண்டு ஆயத்தம் செய்வதற்கு ஆகும் செலவைவிட பன்மடங்காகும். இந்த ஊர்தியை இயற்றி முடிப்பதற்குப் பல ஆண்டுகள் ஆகும். விண்வெளிப் பயணத்தில் பயன்படும் இராக்கெட்டு மூன்றடுக்கினையுடையது. உணவு கொள்ளும் பாத்திரத்தின் அடுக்குகள் செங்குத்தாகச் செருகி நிறுத்தப் பெற்றிருப்பது போல இந்த இராக்கெட்டு கலமே ஒர் உயர்ந்த தாங்கியுடன் பொருத்தப் பெற்று நிறுத்தப்பெற்று இருக்கும் மூன்று அடுக்குகளிலும் எரிபொருள் நிரப்பப் பெற்றிருக்கும். உச்சியிலுள்ள மூன்றாவது இராக்கெட்டின் நுனியில்தான் விண்கலம் பொருத்தப் பெற்றிருக்கும். இயக்கப் பெறுவதற்கு முன்னர் அது சேர்திக்கப் பெறும். பச்சைக் கொடி காட்டப் பெற்றதும் அஃது இயக்கப்பெறும். இது சரியாக இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது தாங்கியினின்று விடுபடும். -- •" () மூன்றடுக்கு இராக்கெட்டு சுமார் 48 கி.மீ. உயரம் செல்லும்பொழுது அதன் வேகம் மணிக்கு சுமார் 4800 கி.மீ. ஆக இருக்கும். அதிலுள்ள எரிபொருள் தீர்ந்ததும் ஒருவித பொறியமைப்பால் அது கழன்று விழும். இதனால் எடையும் குறையும் - - - (t) முதல் அடுக்கு நழுவுவதற்கு முன்னர் இரண்டாவது இராக்கெட்டு அதிலுள்ள தானியங்கு பொறியமைப்பால் இயக்கப் பெறுகின்றது. இராக்கெட்டின் அமைப்பு அடர்த்தி மிக்க காற்றை விடுவதால் இரண்டாவது அடுக்கு 35. முழு விவரம் வேண்டுவோர். இராக்கெட்டுகள் என்ற என் நூலைக் காணவும் கழக வெளியீடு 1964)