பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தமிழில் அறிவியல் செல்வம் இராக்கெட்டு அதிக வேகத்தை அடைகின்றது. அது சுமார் 100 கி.மீ. உயரத்தில் அதன் வேகம் மணிக்கு 19,200 கி.மீ. ஆகிவிடுகின்றது. . - - இந்நிலையில் இராக்கெட்டின் அமைப்பிலுள்ள கூம்பிய வடிவிலுள்ள முக்குப் பகுதியும் கழன்று விடுபட்டுக் கீழே விழுந்து விடுகின்றது. காற்றைக் கிழித்துச் செல்ல உதவும் இப்பகுதிக்கு காற்றே இல்லாத அந்த உயரத்தில் வேலை இல்லை அல்லவா? இதனால் எடை குறைகின்றது. இதனால் அதன் வேகம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. (i) இரண்டாவது அடுக்கு இராக்கெட்டின் எரிபொருள் தீர்ந்ததும் அதுவும் கழன்று நழுவுகின்றது. மூன்றாவது அடுக்கு இராக்கெட்டு இயங்கத் தொடங்குகின்றது. இதன் வேகம் இப்போது மணிக்கு 28,000 கி.மீ. ஆகிவிடுகின்றது. இந்நிலையில் தானியங்கி அமைப்பில் தன்பிடியிலுள்ள துணைக்கோளை விண்கலத்தை விடுவிக்கின்றது. அது வேகமாகத் தன் இலக்கை நோக்கி ஓடுகின்றது. மூன்றாவது இராக்கெட்டும் நழுவி விடுகின்றது. : . • , அகப்பற்றையும் புறப்பற்றையும் நீக்கிய ஆன்மா வீட்டுலகத்தை நோக்கி விரைதல் போல மூன்றடுக்கு இராக்கெட்டுகளையும் மூக்குப்பகுதியையும் நீக்கிய விண்கலம் விண்வெளியில் விரைந்து செல்லுகின்றது. (4) விண்வெளிப் பேரிடர்கள் : விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வோருக்குப் புறப்பட்டது முதல் விண்வெளியில் செல்லும் வரையிலும் அதன் பிறகு அவர்கள் இவ்வுலகிற்குத் திரும்பும் வரையிலும் பல பேரிடர்கள் நேரிடலாம். அவற்றைச் சமாளிக்கும் முறைகளைக் கண்டறிந்துள்ளனர். இம்முயற்சியால் முற்றிலும் அவற்றை நீக்க முடியாவிடினும் பெரும்பான்மையானவை நேரிடாமல் தடுக்க வழி முறைகளைக் கையாளலாம். . . . (அ) சூழ்நிலைப் பாதுகாப்பு : மனிதன் அமர்ந்திருக்கும் விண்வெளிக் கூண்டினுள் பூமியில் அவன் வாழும் சூழ்நிலையே. நிலவச் செய்யப் பெற்றிருக்கும். குளிர் சாதனவசதிகளும் செய்யப் பெற்றிருக்கும். .