பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் முறைப்படி கல்லூரியில் அறிவியல் பயின்றவர். அடிநாள் தொட்டுத் தமிழில் அறிவியல் நூல் அளித்து வருபவர். உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கியவர். பல்கலைக்கழகப் பேராசிரியராக உயர்ந்தார். தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் முதன்மைப் பதிப்பாசிரியராகத் திகழ்ந்தார். திருவேங்கடவன். தமிழ்ப்பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் முதலியவற்றில் பெருமைமிகு பேராசிரியராகத் திகழ்ந்த இவர்கள் ஆற்றிய பணி பெரியது. மிகப் பெரியது. தமிழில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் எழுதிய ஆசிரியர்களுள் இவர் முதல் வரிசையர். கத்தானந்தபாரதி கி.வா. ஜகந்நாதன் சுப்பு ரெட்டியார் மூவரும் பன்னூலாசிரியர்கள். தமிழ் முழுதும் அறிந்த சுப்புரெட்டியார் பல்துறை அறிஞராகவும் திகழ்கிறார். பெரு நூல்கள் எழுதுவதில் பெரு விருப்பம் கொண்ட இவர்கள் தமிழ் பயிற்றுமுறை. கவிதை அனுபவம், கல்வி உளவியல் முதலிய பெருநூல்களைப் படைத்துப் பேரும் புகழும் பெற்றவர். பசி நோக்காது. கண் துஞ்சாது கருமமே கண்ணாய் இருந்து ஆசிரியம், ஆராய்ச்சி, இலக்கியம், சமயம், தத்துவம், பயண நூல்கள், திறனாய்வு. வரலாறு, தன்வரலாறு அறிவியல் எனப் பல்துறைகளில் நூல்கள் எழுதி முத்திரை பதித்தவர். இந்நூலில் கதிரவன், அணு செய்யும் அற்புதங்கள், விண்வெளி ஆய்வின் வளர்ச்சி, மருத்துவத்துறை - நவீன வேளாண்மை முதலியவற்றில் அணுவின் பயன்பாடு பற்றி பொது மக்களுக்கும் புரியும்படி விஞ்ஞான உண்மைகளை எளிய நடையில் விளக்கியுள்ளார். இவரது இலக்கியப் புலமையும் மொழியாற்றலும் இவருக்குக் கை கொடுக்கிறது. விண்வெளிப் பயண வெற்றியை வரலாற்று முறையில் ஆவணப்படுத்தியுள்ள திறம் குறிப்பிடத் தக்கது. ‘உயிரியல் நோக்கில்’ என்னும் தலைப்பில் உயிர்க்குலம் தோன்றிய வரலாற்றையும். படிமுறை வளர்ச்சியையும் திட்டி நுட்பத்துடன் விளக்குகிறார். வளர்ந்து வரும் கால்வழி அறிவியலில் மரபு அணுக்கள் செய்யும் மாய வித்தைகளைப் ஒளிப்படம் போலப் படம்பிடித்துள்ள திறம் எல்லோர் உள்ளத்தையும் கவரும் நிலையில் அமைந்துள்ளது.