பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 67 பார்த்தல் வேண்டும். முதலில் ஆளில்லாத விண்கலங்களைக் கொண்டும் அதன் பிறகு மூன்று விண்வெளி வீரர்களைக் கொண்டும் இச்சோதனைகள் செய்யப்பெறுதல் வேண்டும். இந்தத் திட்டத்தின்கீழ் அப்போலோ 1 முதல் 17 வரை 17 விண்கலங்கள் செலுத்தப் பெற்றன. கலங்கள் ஆளில்லாத பயணம். அப்போலோ-1 முதன்முதல் செலுத்தப் பெற்ற ஆளுள்ள பயணம் இதில் மூன்று விண்வெளி வீரர்கள் சென்றனர். இத்துடன் இந்நாட்டு விண்வெளி வீரர்கள் விண்வெளியில் கழித்தது 78 மணி நேரம் ஆகும். இந்தப் பயணம் அம்புலியில் இறங்க வேண்டும் என்ற குறிக்கோளுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது. (ஈ) அப்போலோ - 8 : அம்புலி மண்டலத்திற்கு ஆட்களை அனுப்புவதற்கு முன்னர் அம்மண்டலத்தை நெருங்கிச் சென்று சில அடிப்படையான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். இதனைத் திறம்பட அறிந்து கொள்வதற்கு அப்போலோ-8 விண்வெளிக்கலம் அனுப்பப் பெற்றது (டிசம்பர் - 1968), - இந்தப் பயணம் ஈடும் எடுப்புமற்றது. இதுகாறும் கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பெற்ற எந்தப் பயணமும் 147 மணி நேரம் சென்ற இந்தப் பயணத்துடன் ஒப்பிடும் தகுதியுடையதன்று. மேலும் இதுகாறும் ஆளுடன் சென்ற பதினேழு அமெரிக்க விண்வெளிப் பயனங்களோ, அல்லது ஆளைக் கொண்ட பத்து சோவியத் விண்வெளிப் பயணங்களோ இதற்கு நிகராகாது. ஏனெனில் இவை யாவற்றிலும் சென்ற விண்வெளி வீரர்கள் அனைவரும்ே பூமியின் சுற்று வழியிலேயே தங்கியிருந்தனர். அன்றியும் அவர்கள் பூமியில் அருகிலேயும் இருந்தனர். இந்தப் பயணத்தில் விண்வெளி வீரர்கள் பூமியின் கவர்ச்சி. ஆற்றலின் இழுப்பினைக் கடந்து வேறொரு கேர்ளின்ன். நெருங்கிச் சென்றனர். அவர்கள் அக் கோளின் கவர்ச்சி. ஆற்றல் ஆதிக்கமுள்ள பகுதிக்குச் சென்றனர். இங்ங்ணம் சென்ற பயணங்களில் இதுவே முதலாவது. இந்தப் - 多ーも。 -