பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - தமிழில் அறிவியல் செல்வம் பயணத்தின் பொழுதுதான் மனிதக் கண்கள் சந்திரனின் பரப்பை மிக அருகிலிருந்து சுமார் 12 கிமீ (70 மைல்) தொலைவில் முதன்முதலாகக் கண்டன. சந்திரனின் பின்புறத்தை - அதாவது பூமியை என்றுமே நோக்கியிராத பகுதியை முதன்முதலாக மனிதன் கண்டது இந்தப் பயணத்தில்தான். இந்தப் பயணத்தின்போது சந்திரனுக்கு அருகிலிருந்து எடுக்கப்பெற்ற ஒளிப் படங்களைக் (Photos) கொண்ட ஃபிலிம்கள் முதன்முதலாகப் பூமிக்குக் கொண்டு வரப் பெற்றன. இதற்கு முன்னர் எடுக்கப் பெற்ற படங்கள் யாவும் தாமாக இயங்கும். மின்கருவிகளால் எடுக்கப் பெற்றுத் தொலைக்காட்சி மூலம் பூமிக்கு அனுப்பப் பெற்றன. எதிர்க்காலத்தில் மனிதன் அம்புலியில் இறங்கும் பயணத்தில் எத்தகைய இராக்கெட்டு பயன்படுத்தப் பெறுமோ அத்தகைய இராக்கெட்டே இப்பயணத்தில் பயன்படுத்தப் பெற்றது. அங்கனமே எந்த மாதிரியான விண்வெளிக் கலம் அப்பயணத்தில் பயன்படுத்தப் பெறுமோ அத்தகைய கலமே இப்பயணத்திலும் பயன்படுத்தப் பெற்றது. -ągsrirsi subląsó asas#5 (Lunar Excursion Model - LEM) greip ஒருபகுதி மட்டும் இதில் பொருத்தப் பெறவில்லை. இந்த அம்புலி ஊர்திதான் சந்திரனைச் சுற்றி வரும் மனிதனைச் சந்திரனுக்குக் கொண்டு செல்லும் இ. அம்புலிக்குச் சென்று மீளும் தத்துவம் அறிவியல் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டியத் திட்டம் அப்போலோ திட்டம் அறிவியல் உலகில், வியப்புக் கடலில் ஆழ்த்திய நிகழ்ச்சிகள் யாவும் இத்திட்டம் செயற்பட்டபோது நடைபெற்றன. மயிர்க் கூச்செறியக் கூடிய செயல்களை இதுகாறும் மக்கள் கண்டுகளிக்கக் காரணமாக இருந்தது இத்திட்டம். இத்திட்டத்தில் மனிதன் திங்கள் மண்டலத்திற்கு அனுப்பப் பெற்று மீட்கப் பெறுவான். இங்ங்னம் சென்று மீள்வதில் சில கணக்கு விவரங்கள் உண்டு.