பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தமிழில் அறிவியல் செல்வம் விண்கலம் தன் வேகத்தை இழந்த நிலையிலும் அது தன்சடத்துவத்தாலேயே (Inertia மிதக்கத் தொடங்கும். அடுத்து விண்கலம் திங்களை நோக்கி விழத்' தொடங்குகின்றது. மலைக்கு மறுபுறமுள்ள திங்கள் 38,400 கி.மீ. பள்ளத்தில் உள்ளது. விண்கலம் திங்களை நோக்கி விழத் தொடங்கியதும், அதன் வேகமும் அதிகரிக்கத் தொடங்குகின்றது. வேகமே இல்லாத கலமாக இருப்பினும், அது மணிக்கு 8,400 கி.மீ. வேகத்தில் திங்களைத் தாக்கும். அப்போலோ-8 என்ற விண்கலம் நடுநிலைக் கோட்டினைக் கடந்தபொழுது மணிக்கு 4,800 கிமீ வேகத்தைக் கொண்டிருந்தது. அதன் வேகத்தைத் தணித்திராவிடில் அஃது ஏறக்குறைய மணிக்கு 13,200 (4800 + 8400 கி.மீ. வீதம் திங்களைத் தாக்கி இருக்கும். திங்களில் இறங்கும்போது இதன் வேகம் பூச்சியமாக இருத்தல் வேண்டும். இதற்கு என்ன செய்யவேண்டும்? விண்கலம் நடுநிலைக் கோட்டினைக் கடக்குங்கால் அதில் பொருத்தப் பெற்றுள்ள இராக்கெட்டுகளின் வால் பகுதி திங்களை நோக்கித் திருப்பிக் கொள்ளும், அதாவது 180° திருப்பிக் கொள்ளும். இத்திருப்பம் வாயு ஜெட்டுகளாலும் (Gas பets) ஜெராஸ்கோப்பு அமைப்பாலும் நடைபெறும் இந்நிலையில் இராக்கெட்டுகள் இயங்கித் திங்களுக்கு எதிர்த் திசையில் கலத்திற்கு உந்து விசை அளிக்கப் பெறுகின்றது. இந்த இரண்டு விசைகளும் கலத்திற்கு ஒன்றையொன்று நடுநிலைக்குக் கொணரத் தொடங்கிக்கலம் திங்களை நோக்கி விரையும் வேகம் தணிக்கப் பெறுகின்றது. இச்செயல் இராக்கெட்டு முறையில் வேகம் தணித்தல் (RocketBraking) என்று வழங்கப்பெறும் திங்களில் வளிமண்டலம் (வளி காற்று) இல்லையாதலின் பூமியில் குதிகுடையினால் Parachute) வேகத்தைத் தணித்து இறங்கும் முறையினை அங்கு மேற்கொள்ள இயலாது. இங்ங்னம் எதிர்த்திசை இராக்கெட்டுகளின் இயக்கம்