பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தமிழில் அறிவியல் செல்வம் அனுப்பினர். அதனால் அப்போலோ - 9 செல்லும் வழியில் அது குறுக்கிட முடியாததாயிற்று. இது காற்றுமண்டலத்தில், உராய்வால் வெப்பமடைந்து எரிந்து போய் விடும். இது பத்து நாள் பயணமாகத் திட்டமிப் பட்டது. ஆனால் 9 நாள் 22 மணி நேரம் 40 நிமிடங்களில் நிறைவு பெற்றது. (ஆ) அப்போலோ - 10 : மூன்று பேர் பங்கு கொண்ட இந்தப் பயணம் திங்களுக்கு 53 கி.மீ. தொலைவிலிருந்து கொண்டு திங்களைச் சுற்றிய நிலையில் திங்களில் இயங்குவதற்குரிய நல்ல இடத்தைக் கண்டறிவதே இப்பயணத்தில் நோக்கமாகும். இந்தப் பயணத்தில் பங்கு கொண்ட மூவரும் அறிவியலறிஞர்கள். இதில் பயன்படுத்தப் பெற்றுள்ள விண்கலத்தில் எடை 47 டன். இந்த வீரர்கள் இருவர் திங்களின் தரையினின்றும் 15,000 மீட்டர் உயரத்திலிருது கொண்டு திங்களில் இறங்க வேண்டிய இரண்டு இடங்களைச் சோதித்தனர். மூன்றாவது விண்வெளி வீரர் திங்களினின்றும் 112 கி.மீ. தொலைவில் தாய்க் கலத்திலிருந்து கொண்டு திங்களை வட்டமிட்ட நிலையில் இருந்தார். கற்று வழிக் குழப்பங்கள் (orbiaperturbances என்று குறிப்பிடப்பெறும் நிலைகளைப் பற்றி அதிகமான செய்திகளைத் திரட்டுவதில் முனைந்தனர். சாதாரணமாக இவை திங்களுக்குச் செல்லும் சாலையிலுள்ள ஆட்டங்கள் (Bumps) என்று வழங்கப் பெறும். - - : , திங்களைச் சுற்றி வலம்வரும்பொழுது பொருள்கள் தாம் செல்லும் சுற்று வழியில் சிறிதளவு எழும்பிக் குதிப்பதற்குக் காரணம் திங்களின் ஈர்ப்பு விசையிலுள்ள ஒழுங்கீனமே என்று கருதுகின்றனர். மேலும், இவர்கள் திங்களின் தரை மட்டத்திற்குக் காந்தப் பொருள்களின் குவியல்கள் கரடுமுரடாக விநியோகிப்பப் பெற்றிருப்பதே இத்தகைய ஈர்ப்பு விசையின் ஒழுங்கீனத்திற்குக் காரணமாகலாம் என்றும் நம்புகின்றனர் அம்புலி அறிஞர்கள். இத்தகைய பொருண்மைத் திரட்சியை (Mass Concentration மிகச் சுருக்கமாக மாஸ்கான்ஸ் Mass cons) என்று வழங்குகின்றனர். இந்தப் பயணத்தில்