பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 75 அம்புலி ஊர்தி இரண்டைரை நாட்களில் 31 முறை வலம் வரும்பொழுது திங்களைச் சுற்றிப் பறக்கும் பொழுது இந்த மாஸ்கான்ஸ் தரும்விளைவுகள் பற்றியும் தேவையாயின் இவ்விளைவுகளைச் சமாளிப்பதற்கு மேற்கொள்ளப் பெற வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பெற்றன. மேலும், இப்பயணத்தில் திங்களின் சூழ்நிலையில் அப்போலோ விண்கலம் நன்கு சோதிக்கப்பெற்றது. அடுத்து வரும் பயணங்களில் அம்புலியில் இறங்குவதற்கு முன்னர் இந்தச் சோதனையை மேற்கொள்ளவேண்டியது மிகமிக இன்றியமையாதது. இந்த விண்கலத்திலும் கட்டளைப் பகுதி, பணிப்பகுதி, அம்புலி ஊர்தி என்ற மூன்றும் இருந்தன. இந்தப் பயணத்தில் அம்புலி ஊர்தி தாய்க் கலத்தினின்றும் தனியாகப் பிரிந்து பலமணி நேரம் தன்னந்தனியாகப் பறந்துகொண்டிருந்தது. தாய்க்கலத்தைச் சேர்வதற்கு முன்னர் இங்ங்னம் தனியாகப் பறப்பது திங்களில் இறங்கும்போது தொடர்ந்து நடைபெற வேண்டிய செயல்களில் ஒன்றாகும். தாய்க்கலம் ஒருவருடன் 96 கி.மீ. உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. மற்ற இருவர். உள்ள அம்புலிக் கலம் திங்களைச் சுற்றிக் கொண்டிருந்தது. இவர்கள் பின்னர் அப்போலோ-11இல் செல்லும் தம் தோழர்கள் இறங்கவேண்டிய அமைதிக் கடல் (Sea of Tranquig) என்ற இடத்தை இருமுறை அண்மையிலிருந்து சோதித்தனர். அந்த இடம் ஒரே மட்டமாக இருப்பதையும் கண்டு.உறுதி செய்து கொண்டனர். இவர்கள் திங்களுக்கு 15 கி.மீ. அருகில் வெற்றியுடன் சுற்றி வந்தனர். திங்களின் சூழலில் அம்புலி ஊர்தி சரியாக இயங்கும் என்பதும் நிலைநாட்டப்பெற்றது. அம்புலி ஊர்தி தாய்க்கலத்தினின்றும் பிரிந்து சென்ற எட்டு மணி நேரத்திற்குப் பிறகு அதில் சென்ற இருவீரர்களும் திங்கள் ஊர்தியைத் தாய்க்கலத்துடன் திரும்பவும் இணைத்தனர் திங்களின் சூழலில் இவ்வாறு இணைந்தது இதுவே